பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/739

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதிை தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் அது தலைவி தமர் இடைச்சுரத்திற் கண்ணுறின் அவர்கேட்க அவட்குக் கூறுவானாய் வழக்கியல் கூறலும் உரியனென்க. நீதி. நூல் பிறழக்கூறின் இராக்கதமாம். உ-ம். 'துமர்வரி னோர்ப்பி னல்லது தமர்வரின் முந்நீர் மண்டல முழுது மாற்றா தெரிகணை விடுத்தலோ விலனே பரிமதர் மழைக்கண் கலுழ்வகை யெவனே" உம்மையான் அவ்வாறன்றி மருட்டிக் கூறவும் பெறும். உ-ம். "அழிவிலர் முயலு மார்வ மாக்கள் வழிபடு தெய்வங் கட்கண் டாஅங் கலமரல் வழித்தந் தீர. மாறே” (நற்றிணை க) இது தெய்வம்போல விடுந்தன்மையினை யல்லையென. மருட்டினான். ஆய்வுரை : இது, தலைவற்குரியதோர் மரபு கூறுகின்றது. (இ.ள்) தலைவியை உடன்கொண்டு போகும் இடைச்சுரத்தின்கண்ணே தலைமகன் உலகியல் நெறியினை மனத்திற் கொண்டு தனது ஆற்றல் தோன்ற ஆணை மொழியினை எடுத்துரைத்தற்கும் உரியன் எ-று. "கிளத்தற்கும் உரியன்’ எனவே, மெல்லிய காமம் நிகழு மிடத்து வன்மொழியாகிய ஆணையினைத் தலைமகளிடம் கூறுதல் ஏற்புடைத்தன்றாயினும் உலகியல் கருதித் தலைவன் அவ்வாறு ஆணை கூறுதல் தவறாகாது என அறிவுறுத். தாராயிற்று. ளஅள. ஒழிந்தோர் கிளவி கிழவன் கிழத்தியொடு மொழிந்தாங் குரியர் முன்னத்தின் எடுத்தே. இளம்பூரணம் : என்- எனின். இது தலைமகனுந் தலைமகளும் அல்லாதார்க் குரியதோர் மரபு உணர்த்துதல் துதலிற்று. இது தலைவன் இடைச்சுரத்தில் உடன்போதிய தலைவியொடு வழக்கியலாணையாற் கூறியது.