பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/740

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் நூற்பா - ன் அன శ్రీ . బ్రీ (இ.ஸ்) தலைவனையுந் தலைவியையும் ஒழிந்த பதின்மரும்' அத் தலைவனொடுந் தலைவியொடுஞ் சொல்லிப்போந்த மரபினாற் சொல்லப்பெறுவர்; இடமுங் காலமுங் குறித்து என்ற வாறு. மொழிந்தாங்கு என்பதனை வழக்கியலாணை யெனினு மமையும். முன்னமாவது : 'இவ்விடத் திம்மொழி இவரிவர்க் குரித்தென் றவ்விடத் தவரவர்க் குரைப்பது ” (தொல்-செய்யுளியல், ககூக) எடுத்தென்பது அறம்பொருளின்பங்கட்குத் தகாத சொத்களை யெடுத்துக்கூறுதல், அஃதாவது தலைவனைப்பார்ப்பானும் பாங்கனும் கழறலும், தோழி இயற்பழித்தலும், தலைவியைச் செவிலி யலைத்தலும், பாணர் கூத்தர் பாசறையிற் சென்று கூறுதலும், தோழி தலைமகனை வற்புறுத்தலும் முதலாயின. (கஅஎ) Gu sig fröaffwyth : இதுவுங் கண்டோர் கூற்று. (இ-ள்) மேலைச்சூத்திரத்துக் கூறிய தலைமகனையுந் தலை மகளையும் ஒழித்து ஒழிந்தோ ரெனப்படுவார் கண்டோரெனப் படுப. அவர் கூற்றுங் கிழவன் கிழத்தியொடு மொழிந்தாங்கு வழக்கியலாணை (506)யிற் கிளத்தற்கும் உரியர் என்பான் முன் னத்தினெடுத்துக் கூறுப என்றா னென்பது. முன்னத்தி னெடுத்த லென்பது அதிகாரத்தான் அறநூற்குத் தக ஒத்தினானெடுத்துரைப்ப வென்றவாறு; அவை, “பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க் கல்லதை மலையுளே பிறப்பினு மலைக்கவைதா மென்செய்யு நினையுங்கா னும்மக ணுமக்குமாங் கனையளே (கலி: 9) என்றாற் போல்வன. 1. ஒழிந்தோர் என்பதற்குத் தலைவனையுந் தலைவியையும் ஒழிந்த பதின்மர் என இளம்பூரணர் உரைவரைந்துள்ளார். வாயில்கள் பன்னிருவருள் இளம்பூரணர் குறித்த பதின்மர் இன்னாரென்பது தெளிவாகத் தெரியவில்லை. 2. முன்னத்தின் எடுத்தல் என்பது, முன்னைச் சூத்திரத்திற்கூறிய முறை. யானே வழக்கியலானையாகிய நீதிநூல் விதியினை எடுத்துக் கூறுதல். முன்னம் என்றது ஈண்டு அறநூற்குறிப்பினை.