பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/742

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா னஅஆ ఆ i్కజీ எஅஅ. மனையோள் கிளவியுங் கிழவன் கினவியும் நினையுங் காலைக் கேட்குநர் அவரே. இாைம்பூரணம் : என்-எனின். இதுவு மது. (இ-ள்.) தலைவியுந் தலைவனுங் கூறக் கேட்போர் மேற் சொல்லப்பட்ட பதின்மரும் என்றவாறு. இது முதலாகக் கேட்போரைக் கூறுகின்றது.2 (க.அ.அ) இது, கேட்போரென்னும் உறுப்புணர்த்துகின்றது. (இஸ்) முன்னர்க் கூற்றிற்குரிய ரெனப்பட்ட பன்னிரு வருட் கேட்டற்குரியார் தலைமகனுந் தலைமகளும் ஒழித்து ஒழிந்த பதின் மரும் (எறு). அவர் கேட்பனவும் அவ்விருவர் கிளவியுமே யெனவுந் தத்தங்கிளவி கேளாரெனவுங் கூறியவாறு. மனையோள் கிளவியுங் கிழவன் கிளவியு மென்பதனை மேற்போயின கூற்றிற் குங் கூட்டியுரைக்க. உரைக்கவே கூறுவனவுங் கேட்பனவு: மெல்லாம் அவ்விருவர் கிளவியுமே யெனவுந் தத்தங்கிளவி கூற வுங் கேட்கவும் பெறாரெனவுங் கூறியவாறாயிற்று 3 இங்ங்னம் விலக்கப்பட்டனவற்றுள் வேறுபட வருவனவும் மேற்கூறு கின்றாம். மற்றுக் கூற்றுக்கு உரியரெனப்படுவார், அவ்வயின் தலைவியுந் தலைவனுங் கூறக் கேளாரோ வெனின், அவை தங் கிளவியாகவின் தாங்கேட்டல் விதந்தோத வேண்டுவ தன் றென்பது. “நினையுங்காலை யென்றதனால் தலைமகள் கொல்லக் கேட் போருந் தலைமகன் சொல்லக் கேட்போருந் தலைவனுந் 1. அவர் என்றது, மேற்குறித்த பதின்மரைச் சுட்டி நின்றது. 2. ளஅக முதல் ளஅஎ முடியவுள்ள சூத்திரங்களால் கூற்று நிகழ்த்துவோ ரியல்புரைத்த ஆசிரியர் ள.அ.அ.ம் சூத்திரமுதலாகச் கேட்போரைக் கூறுகின்றார். எனவே இச்சூத்திரத்திற்கு இதுவுமது' என்னும் கருத்துரை பொருத்த முடைய தாகத் தோன்றவில்லை. 3. வாயில்கள் பன்னிருவருள். தலைவனும் தலைவியும். அல்லாத ஏனைய பதின்மரும் கேட்பன தலைவன் தலைவி யென்னும் இருவர் கூற்றுமே. எனவே அப் பதின்மருள் தம்முள் தாமே கேட்டார் என்பதுபடச் செய்யுள் செய்யம் பெறார் என்பதாம்.