பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/743

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூங்.உ தொல்காப்பியம் - பொருளதிகாரம்- உரைவளம் தலைவியுந் தம்முட் கேட்டனவற்றுக் குரியனவும் ஆராய்ந்து கொள்ளப்படும். மேற்கூறிய வகையானென்பது; எனவே,தலைமகன் கூறப் பரத்தை கேட்டலுந் தலைமகள் கூறப் பரத்தை கேட்டலும் முதலாயின புலனெறி வழக்கிற் கெய்தாதன விலக்கப்பட்டன. ஒழிந்தனவற்றுட் சில வருமாறு: 'விளங்குதொடி முன்கை வளைந்துபுறஞ் சுற்ற நின்மார் படைதலி னினிதா கின்றே” (அகம்:58) என்னுந் தலைமகள் கூற்றுத் தலைமகன் கேட்டது. 'வருந்தா தேகுமதி வாலெயிற் றோயே’ (நற்:9) என்பது, தலைமகன் கூற்று, தலைமகள் கேட்டது. “நின் கேள், புதுவது பன்னாளும் பாராட்ட யானு மிதுவொன் றுடைத்தென வெண்ணி’ (கலி: 24) எனவும், ‘மாலையு முள்ளா ராயிற் காலை யாங்கா குவங்கொல் பாண’’ (அகம் :4) எனவும், "உயங்கின் முன்னையென் மெய்யென் றசைஇ’ (அகம் :17) எனவும், "ஒண்டா ரகலமு முண்ணுமோ பலியே" (குறுந்: 362) எனவும, "எல்லீரு மென்செய்தி ரென்னை நகுதிரோ' (கலி: 42) எனவும் இன்னோரன்னவெல்லாந் ()தோழியும் (?) பாணனுஞ் (3)செவிலியுங் ()கண்டோரும் (3)அறிவருங் கேட்பத் தலைமகள் கூற்று வந்தன. பிறவும் அன்ன. "இடிக்குங் கேளிர் நுங்குறை யாக பரந்தன் றிந்தோய் நோன்றுகொளற் கரிதே' எனவும், (குறுந்: 58) 2. நினையுங்காலை - கூறுவோறும் கேட்போரும் ஆகிய இவ்விருதிறத்தார் தகுதியினையும் ஆராயுங்காலத்து, எனவே, தலைமகன் கூறப் பரத்தை கேட்டாள் என்றலும் தலைவி கூறப் பரத்தை கேட்டாள் என்றலும் எனத் தலைமைப் பண்பு சிதைய வருவன புலனெறிவழக்கிற்கு ஒவ்வாதன என விலக்கப்பட்டன என்பது பெறப்படும்.