பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/747

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఢీ ఓ షౌ தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவ ளம் என்றவழி, யார்க்கும் என்றது அகத்தினையோர்க்கும் புறத்திணையோர்க்கு மென்றவாறு. யார்க்கும் வரையா, ரென்றதனை, எச்சப்படுத்துச் சிலர்க்கு வரையப்படுமென்பது கொள்க. என்னை? பார்ப்பார் கூற்று, தலைமகனுஞ் செவிலியும் நற்றாயுங் கேட்பினல்ல்து பிறர் கேட்டற்கேலா. அறிவர் கூற்று, தலைமகளுந் தோழியுஞ் செவிலியும் நற்றாயுங் கேட்டற்குரியர். புறத்திணைக்கண்னும் பொதுவியற்கரந்தையோர்க்கும் (185) பார்ப்பார் கிளவி ஏலாவெனவும் அறிவர் கிளவி ஏற்குமென வும், பிறவு மின்னோரன்ன கொள்க.2 'யாப்பொடு புணர்ந்து என்பது அகப்பொருளும் புறப் பொருளுமாக யாக்கப்படுஞ் செய்யுளெல்லாவற்றோடும் பொருந்து மென்றவாறு. இவர் கிளவி வரையப்படாதெனவே அவர் வாயிலாகிய வழித் தலைமகள் வாயின் மறுத்தலிலளென் பது உம் புறத்திணைத் தலைவர்க்கும் அவ்வாறே வழிநிற்றல் வேண்டுமென்பதுTஉங் கூறியவாறாயிற்று; என்னை ? அறிவதிெ னப்படுவார் மூன்று காலமுந் தோன்ற நன்குணர்ந்தோரும் புலனன் குணர்ந்த புலமையோரு (647) மாகலானும், இனிப் பார்ப்பாரும் அவ்வாறே சிறப்புடையராகலானும், அவர்வழி நிற்றல் அவர்க்குக் கடனாகலானுமென்பது. (கக எ) 1. யார்க்கும் வரை 11ார்’ என்புழி முற்றும்மையை எச்சப்படுத்துச் சிலர்க்கு வரையப்படும்' எனக் கொண்டார் பேராசிரியர். 2. பார்ப்பார் கூற்று அகத்திணை மாந்தருள் தலைமகனுஞ் செவிலியும் நற்றாயும் கேட்பினல்லது பிறர் கேட்டற்கு ஏலா எனவும், அறிவர் கற்று தல்ைவியுந் தோழியுஞ் செவிலியும் நற்றாயும் கேட்டற்குரியர் எனவும், புறத்தினையிலும் பொதுவியற்கரந்தையோர்க்குப் பார்ப்பார் கிளவி ஏலாவெனவும் அறிவர் கிளவி ஏற்குமெனவும் பேராசிரியர் கூறும் வரையறை , சங்கவிலக்கிய மரபினையும், அதன்கண் கூறப்படும் பண்டைத் தமிழர் வாழ்வியலமைப்பினையும் அடிறொற்றி யமைத்தமை நுணுகி நோக்கத்தகுவதாகும். தமிழ் மக்களது அகத்தினை வாழ்விலும் புறத்திணை வாழ்விலும் முழுவதுங் கலவாது ஒரளவு ஒதுங்கி நிற்கும் அயன்மையாளராகப் பார்ப்பாரும், தமிழ் மக்களது அகவாழ்விலும் புறவாழ்விலும் நீக்கமின்றிக் கலந்து நின்று அவர்தம் வாழ்வினைச் செம்மை செய்யும் கடமையாளராக அறிவரும் குறிக்கப்பெற்றுள்ளமை பேராசிரியர் தரும் இவ்வுரை விளக்கத்தால் இனிது புலனாம். 3. அறிவரது இயல்பினை விளககி அவர் வழி நிற்றல் அகத்திணை புறத்தினை மாந்தர் அனைவர்க்குரியகடமையாமெனவும், இனிப் பார்ப்பாரும் அல்வாறே சிறப்புடையர் எனவும் பேராசிரியர் தரும் உரைவிளக்கம், முறையே 'ஆணஞ்சான்ற அறிவர் , பேணுதகு சிறப்பின்பார்ப்பான்' (செய்.ஏாகய)என