பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/750

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்ப கi) శ్రీ : శ్రీ கிழத்தியைச் சுட்டுதலெனவே பாங்காயினார் கேட்பச் சொல்லினும் அமையுமென்பதாயிற்று. "செறிதொடி தெளிர்ப்ப வீசிச் சிறிதிவ ணுவமந்து வருகஞ் சென்மோ தோழி' (அகம்: 106; என்றக்கால் தலைவிக்குப் பாங்காயினார் கேட்டக்கூறல் வேண்டுமென்பது. வாயில்களுந் தலைமகளை ஊடல் காப்ப அல்லது சொல்லாராகலான் தலைமகள் கேட்பாளாகச் சொல்ல வேண்டுமென்பது. சுட்டாக் கிளப்புப் பயனில வென்றதனான் வாயில்கள் கூறுவனவுங் கிழத்திக்குப் பாங்காயின தோழி கேட்பச் சொல்லினும் அமையும். அவற்றுக்குச் செய்யுள். அஒருயிர் மாத ராகவி னிவளுத் தேரா துடன்றனள் மன்னே’’ என்பது கிழத்தி கேட்ப வாயில்கள் கூறியது: தோழி கேட்பச் சொல்லியது உமாம். {ககை} இதுவுமது. (இ-ள்). பரத்தையும் வாயில்களும் என்னும் இரண்டு வேறு பாட்டின் கண்ணும் கிழத்தி கேட்பாளாகக் கருதிக் கூறாத கூற்றுப் பயமில. எறு. கிழத்தியைச் சுட்டாவெனத் தலைவி பாங்காயினார் கேட்பக் கூறுதலு மமையும். உ-ம். “செறிதொடி தெளிர்ப்ப வீசிச் சிறிதிவ ணுலமந்து வருகஞ் சென்மோ தோழி” இது தலைவிக்குப் பாங்காயினார் கேட்பக் கூறியது.! வாயில்களுந் தலைவி யூடல் தீரவே கூறவேண்டுதவின் அவள் கேட்பவே கூறுவாராயிற்று. இன்னு மதனானே கோழி கேட்ப வாயில்கள் கூறினு மமையும். உ-ம். “ஒருயிர் மாத ராகலி னிவளுந் தேரா துடன்றனண் மன்னே" இது வாயில்கள் கூறத் தலைவி கேட்டலின் தோழி கேட்டலுமாம். 1. கிழத்தியைச் சுட்டாவெனவே. என்றிருத்தல் வேண்டும்.