பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/756

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பாள கூஉ கசரு வாற்றான் அவைதாங் கூறுவன போலவுங் கேட்பன போலவுங் கூறுமாறமையு மென்று கூறுவர் புலவர் எ-று கூற்றும் உடன்கூறினார் மேற்கூற்றிற்குரியன இவையென வரையறாமையின். பொழுதாவன: மாலையும், யாமமும், எற்பாடும், காரும்,கூதிரும், பனியும், இளவேனிலும் போல்வன. பிறவுமென்றதனால் புல்லும் புதலும் முதலியனவுங்கொள்க. உ-ம். 'கதிர்பகர் ஞாயிறே கல்சேர்தி பாயி னவரை நினைத்து நிறுத்தென்கை நீட்டித் தருகுவையாயிற் றவிரு மென் னெஞ்சத் துயிர்திரியா மாட்டிய தி' (கலி கச உ} "வாள்வரி வேங்கை வழங்குஞ் சிறுநெறியெங் கேள்வரும் போழ்தி னெழால்வாழி வெண்டிங்காள்” 'உறுதி தூக்கத் துரங்கிய வறிவே' (நற்றிணை.க.அச) 'நேர்ந்தநங் காதலர் நேமி நெடுந்திண்டே ரூர்ந்த வழிசிதைய ஆர்கின்ற வோதமே பூந்தண் பொழிலே புணர்ந்தாடு மன்னமே யீர்ந்தண் டுறையே யிது தகா தென்னிரே” (சிலப். கானல்வரி) 'பொங்கிரு முந்நீ ரகமெலா நோக்குபு திங்களுட் டோன்றி யிருந்த குறுமுயா லெங்கே எரிதனகத் துள்வழிக் காட்டிமோ' (கலி.கசச) 'காய்ந்தநோ யுழப்பாரைக் கலக்கிய வந்தாயோ --- . ... மாலை (கவி-கஉo) 'நீ காணவும் பெற்றாயோ காணாயோ மடநெஞ்சே." (கலி-கது.க.) எனவரும். புள்ளெனவே வண்டு முதலியனவும் அடங்கும். "அம்மெ னினர வடம்புகா ளன்னங்காள்' (சிலப்-கானல்) ஒழிந்தன வந்துழிக்காண்க. ஆய்வுரை : இது, கேட்டற் பொருண்மைக்கண் வருவதோர் மரபு வழு அமைக்கின்றது.