பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா அ ருக "நாண்" என்னும் நேரசைப் பின்னர், 'உடையரிவை’’ யெனத் தனித்முவந்த உகரம் நேர்பசையாகாது. 'வார்முரசு’ என்றவழி வார்என்னும் நேரசைப்பின்னர் முரசென மகரம் ஊர்ந்து வந்த உகரமும் நேர்பசையாகாது. “வற்றுறுசெய்தி” எனவும், 'பரன்முரம்பு’’ எனவும், வந்தவழி வற்றெனவும் பரலெனவும் நின்ற நேரசை நிரையசைப் பின்னர் உறுசெய்தி யெனவும் முரம்பெனவும் வந்த உகரங்களும் நேர்பசையாகா, “சின்னுந்தை' 'இராதுந்தை' எனக் குற்றுகரம் வந்தவழியும் நேர்பசை நிரைபசையாக வென்றவாறு,! "நாணுத் தளையாக வைகி' (அகம். 29) என்றவழி ணகார வீறு புணர்ச்சிவகையாற் பெற்ற உகரம் நிலை மொழித்தொழிலாகலான் அது நாகு என்னுங் குற்றுகரம்போல் ஒற்றுமைப்பட்டு நேர்பசையாயிற்று. 1. இருவகையுகரமும் இயைந்து நேர்பசை நிரைபசையாங்கால் முற்றுகரம் வருமொழியைச் சிதைத்துப்பிரித்து அவற்றினின்றும் வாங்கி நிலைமொழியெழுத்துடன் கூட்டி நேர்பசை நிரையசை கொள்ளப்படா என ஆசிரியர் தெளிவுபடக் கூறியதனால் வருமொழி முதலிலுள்ள, உகரம் நிலைமொழியொற்றினை பூர்ந்து, நானுடையரிவை’ என வருமிடத்து நாண் என்னும் நேரசைப் பின்னர் வருமொழிமுதலில் ஒற்றுாராது தனித்து வந்த உடை என்பதன் உகரம் நிலைமொழியீற்றின் மெய்யினையூர்ந்து நாணு நேர்பு எனக்கொள்ளப்படாதென்பதும், வார்முரசு’ எனவரும் இருமொழித்தொடரில் வருமொழிமுதற்கண் மகரவொற்றினையூர்ந்து வந்த 'மு' என்னும் முற்றுகரத்தைப் பிரித்து வாங்கி நிலைமொழிச் சொல்லாகிய வார்’ என்பதுடன் கூட்டி வார்மு' என நேர்பு அசையாகக் கொள்ளப்படாதென்பதும், இவ்வாறே மொழி முதற்குற்றுகரமாகிய நுந்தையென்பது சின்னுந்தை, இராதுந்தை என இருமொழித் தொடராக வந்த நிலையில் வருமொழிமுதற்கண் உள்ள து’ என்பதனை நிலைமொழியிலுள்ள நேரசை திரையசைகளுடன் கூட்டி சின்னுந் எனவும் 'இராதுந்' எனவும் கூட்டி நேர்பு நிரைபு கொள்ளப்படாதென்பதும் எடுத்துக்காட்டுடன் விளக்கப் பெற்றன.