பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/761

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூரும் தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் ள கூச இறப்பே நிகழ்வே எதிர தென்னுந் திறத்தியல் மருங்கில் தெரிந்தனர் உணரப் பொருள்நிகழ் வுரைப்பது கால மாகும். இளம்பூரணம் : என்- எனின். நிறுத்தமுறையானே காலமாமாறு உணர்த்து தல் துதலிற்று. (இ-ள்) இறந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலமெனக் கூறப் பட்டியலும் பக்கத்தின் ஆராய்ந்து நோக்குமாறு பொரு ணிைகழ்ச்சியைக் கூறுவது காலமாகும் என்றவாறு. “முதுக்குறைந் தனளே முதுக்குறைந் தனளே மலையன் ஒள் வேற் கண்ணி முலையும் வாரா முதுக்குறைந் தனளே’ இஃது இறந்த காலத்தின்கட் புணர்ச்சியுண்மை தோன்ற வந்தது.2 இனி, ‘அண்ணாந் தேந்திய வனமுலை தளரினும் பொன்னேர் மேனி மணியில் தாழ்ந்த நன்னெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும் நீத்த லோம்புமதி பூக்கேழ் ஊர' {றிநற்ணை கC) என்றவழி நிகழ்காலம் இளமைப் பருவமென்பது தோன்ற வந்தது. இதனுள், நீத்தலோம்புமதி யென்பது எதிர்காலங் குறித்து நின்றது . இவ்வகையினாற் காலமுமிடமும் எல்லாச் செய்யுளின் கண்ணும் வருமென்று கொள்க. (க.க ச) இது, கால முணர்த்துகின்றது. (இ-ஸ்) மூன்று காலத்தினும் நிகழ்கின்ற நிகழ்ச்சி அச்செய்யுளுட் டோன்றச் செய்யிற் கால மென்னும் உறுப்பாம் (எ-று) 1. தெரிந்தனருள்ளப்' என்பது பேராசிரியர் கொண்ட பாடம். 2. முதுக்குறைந்தனள்" என்ற இறந்தகாலச் சொல் புணர்ச்சியுண்மை தோன்ற நின்றமை காலம் என்னும் செய்யுளுறுப்பாம். 3. அண்ணாந்தேந்தியவனமுலை, பொன்னேர்மேனி, நன்னெடுங்கூந்தல் என்ற தொடர்கள் நிகழ்காலம் இளமைப் பருவம் என்பது புலப்பட வந்தன. 4. நீத்தலோம்புமதி' என்பது இவளை எக்காலத்தும் கைவிடாது பாதுகாப்பாயாக எனப் பொருள் தந்தமையின் எதிர்காலங் குறித்துநின்றது.