பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/762

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் நூற்பா - கச் கூருக பொருணிகழ்ச்சியைக் காலமென்றதென்னை ? காலமென வேறு பொருள் இல்லதுபோலவெனின் அஃது ஈண்டாராய்ச்சி யின்று நியாய நூலாராய்ச்சி யென்.க 2 "வில்லோன் காலன கழலே தொடியோள் வேய்பயி லவழும் முன்னி யோரோ' (குறுந்,7) என்னும் பாட்டினுள் வில்லோனுந் தொடியோளும் பொரு ளெனப்படும்; "வேய்பயி லவழும் முன்னி யோரோ" என்பது அப் பொருணிகழ்ச்சியான் இறந்தகால மெனப்படும். அப் பாட்டிற்குச் சிறந்தார் அவராகலின் அவரே பொருளாயினா ரென்பது. மருந்தெனின் மருந்தே வைப்பெனின் வைப்பே அரும்பிய சுணங்கி னம்ப்கட் டிளமுலைப் பெருந்தோ னு,ணுகிய நுசுப்பிற் கல்கெழு கானவர் நல்குறு மகளே” (குறுந் , 71) என்பது, நிகழ்காலம்; 'பகலும் பெறுவையிவ டடமென் றோளே” (கலி:49) என்பது, எதிர்காலம். புறத்திற்கும் இவ்வாறே இன்றியமையா தென்பது. பெரும் பொழுது சிறுபொழு தென்பன ஈண்டுத் திணையெனப்பட் டடங் கின; என்னை? முதலும் கருவும் உரிப்பொருளுங் கூட்டித் திணையாகவின். (202) நச்சினார்க்கினியம் : இது காலமென்னுமுறுப்புக் கூறுகின்றது. 1, காலமென வேறுபொருள் இல்லதுபோலப் பொருள் நிகழ்ச்சியைக் காலம் என்றது என் ைனயெனின் 5167 இயைத்து வினவுக. 2 . காலம்" என்பதனை உள்பொருளாகவே த்ொல்காப்பியனார் கொன் டார் என்பது, 'காலம் உலகம் (த்ொல். கிளவிரு அ) எனவும் வினையெனப்படுவது வேற்றுமைகொளாது நினையுங்காலைக் காலமொடு தோன்றுறம் (தொல்,வினை- க) எனவும் வரும் அவரது வாய்மொழியால் இனிது புலனாம்.