பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/763

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூருஉ தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் (இ-ள்). இறப்..... .து. எ-து இறப்பும் நிகழ்வும் எதிர்வும் என்னும் மூன்று காலத்தே. இயன். மருங்கில் எது எல்லாத். திணையும் நிகழ்கின்ற நிகழ்ச்சிக்கண்ணே பொருணிகழ்வுணரத்தெரிந்தன. ருரைப்பது காலமாகும். என்பது பொருணிகழ்ச்சி. யுணரத் தெரிந்தனரா யுரைப்பது காலமென்னும் உறுப்பாம் எ-று. உ-ம். 'வில்லோன் காலன கழலே.... முன்னியோரே'(குறுந்-எ) இதனுள் வில்லோன் தொடியோளென்பன பொருள். முன்னியோர் எ-து, தம்பொருள் நிகழ்ச்சியாகலின் இஃ திறந்தகாலமெனப்படும். இதற்குச் சிறந்தாரவர்களாதலின் அவர்களே பொருளாயினார். “மருந்தெனின் மருந்தே வைப்பெனின் வைப்பே யரும்பிய சுணங்கி னம்பகட் டிளமுலைப் பெருந்தோணுணுகிய நுசுப்பிற் கல்கெழு கானவர் நல்குறு மகளே” (குறுந் எக) இது நிகழ்காலம். 'பகலும் பெறுவையிவ டடமென் றோளே” (கலிங் சு இஃ தெதிர்காலம். } புறத்திற்கு மிவ்வாறே யின்றியமையாதென்பது; பெரும் பொழுதுஞ் சிறுபொழுதும் முதல், கரு. உரிப்பொருளோடு கூடித் திணையாகலின் இக்காலம் அவற்றின்வேறாம். ஆய்வுரை : இது, நிறுத்தமுறையானே காலம் என்னும் உறுப்பு உணர்த்துகின்றது. (இ.ஸ்) இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் எனக் கூறப்பட்டு இயலும் மூன்று காலத்தினும் நிகழ்கின்ற நிகழ்ச்சியினை ஆராய்ந்து உணருமாறு செய்யுளுள் தோன்றச் செய்யின் அது காலம் என்னும் உறுப்பாகும் எ-று. பெரும்பொழுதும் சிறுபொழுதும் ஆகிய பருவ காலங்கள் முதல், கரு, உரிப்பொருள் என்பவற்றோடு கூடித் திணையென அடங்குமாதலின் அவற்றின் வேறாகிய பொருள் நிகழ்ச்சியை ஈண்டுச் செய்யுட்குரிய காலம்' என்னும் உறுப்பாகக் கொண்டார் ஆசிரியர்,


1. பேராசிரியருரையைப் பின்பற்றியமைந்தது.