பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

за ф தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரை வளம் 'விழவுத் தலைக்கொண்ட" (அகம், 17) என்றக்காலும் அவ்வாறே ஆகார வீறும் உகரம்பெற்று நிரைபசை யாயிற்று. 'மின்னு மிளிர்ந்தன்ன கணங்குழை” (அகம். 158) எனவும், "முழவு முகம் புலரா" (அகம். 206) நற்றிணை, 200) எனவும் வருவனவும் அவை. 'நானுத்தளை’ என்றாற்போல வரும் ஒற்றுப்பேறு முன்னர்ச் சொல்லுதும். “நீர்க்கு "நிழற்கு” என்ற உருபும் நிலைமொழித் தொழிலாதலான் அவையும் நேர் பசை நிரைபசையா மென்பது இதனாற் பெற்றாம்.1 'நிற்றலின்று” என ஒருமைகறி முற்றுகரமே கொண்டமையிற் குற்றுகரமாயின் இடையும் இறுதியும் நின்று நேர்பும் நிரைபுமாம் என்றவாறாம். அவை, ‘ஆட்டுத்தாள்’ சேற்றுக்கால்” எனவும், 'எப்போற் கிடந்தானென் னேறு’ (பு. வெ. வாகை.22) எனவும், இடையும் இறுதியுங் குற்றுகரம் தேர்பசையாயிற்று. 'களிற்றுத்தாள்’ எனவும், 1. நாண், மின் என்றாங்கு வரும் மெய்யீறுகள் முறையே நா என நிலைமொழித்ெ ணு, மின்னு: தாழிலாகிய உகரம் பெற்று நின்றவழியும், விழா முழா என்றாங்கு வரும் ஆகாரவீறு, விழவு, முழவு என ஆகாரம் குறுகி உகரம் பெற்ற வழியும் நீர், நிழல் என்றாங்குவரும் பெயர்கள் முறையே நீர்க்கு நிழ நிலைமொழித் தொழிலாகிய உகரவீற்று உருபு பெற்ற வழியும் வரும் முத்துகரமே நேர்பு, திரைபு என்னும் உரியசைகட்கு உறுப்பாம் என்பது, இங்கு உரையில் எடுத்துக்காட்டப்பெற்ற உதாரணங்களால் இனிது புலனாதல் காணலாம். தானு:த் தனையாக', 'விழவுத்தலைக்கொண்ட' என முற்றுகரமும், ஆட்டுத்தாள். களிற்றுத்தாள் எனக்குற்றுகரமும் வருமொழி ஒற்றோடு தோன்றி நேர்புகை திரைபசையாதல் குற்றியலுகரமும் முற்றியலுகரமும் ஒற்றோடு தோன்றி நிற்கவும் பெறுமே" என அடுத்துவரும் நூற்பாவினால் உணர்த்தப் பேறுதளின் அதன் உரையில் விளக்கப்பெறும் என்பார் நாணுத்தளை என்றாற் போல வரும் இந்துப்பேறு முன்னர்ச் சொல்லுதும் என்றார்.