பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/770

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் ... நூற்பா ள கூ அ கூருகூ ள கூ அ. சொல்லொடுங் குறிப்பொடும் மூடிவுகொள் இயற்கை புல்விய கிளவி எச்சம் ஆகும். இனம் பூரணம் : என்-எனின். நிறுத்தமுறையானே எச்சவகையாமாறு உணர்த்துதல் நுதலிற்று, (இ-ள்) பிறிதோர் சொல்லொடும் பிறிதோர் குறிப்பொடும் முடிவுகொள்ளும் இயற்கையைப் பொருந்திய செய்யுள் எச்ச மாகும் என்றவாறு. எனவே சொல்லெச்சம் குறிப்பெச்சமென இருவகையாயின அது எச்சவியலுட் பிரிநிலை வினை யென்னுஞ் சூத்திரத்துள் (தொல், சொல். எச்ச வச) பிரிநிலையென்பது முதலாகச் சொல்லப்பட்ட எண்வகை யானும் வருவன சொல்லெச்சமாம். குறிப்பென்றோதப் பட்டது குறிப்பெச்சமாம்.' (கக ைஅ) இஃது, எச்சங் கூறுகின்றது. (இ-ள்) கூற்றினானுங் குறிப்பினானும் முடிக்கப்படும் இலக்கணத்தோடு பொருந்திய கிளவி, எச்சமென்னும் உறுப்பாம் (எ-று). 'முடிவுகொள் இயற்கை யெனவே, செய்யுளின்கண்ண தன்றிப் பின்கொணர்ந்து முடிக்கப்படுமென்பது பெற்றாம்.? (உ-ம்) செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த செங்கோ லம்பின் செங்கோட் டியானைக் கழறொடிச் சேஎய் குன்றம் குருதிப் பூவின் குலைக்காந் தட்டே' (குறுந்: க.) 1. செய்யுளுறுப்பாகிய எச்சம் என்பது, சொல்லெச்சம் குறிப்பெச்சம் என, இரு திறப்படும். பிரிநிலைவினையே என்புழிச் சொல்லதிகாரம் எச்சவியலிற் கூறப்பட்ட பத்துவகை யெச்சங்களுள், பிரிநிலையெச்சம், வினையெச்சம், டெய ரெச்சம், ஒழியிசையெச்சம், எதிர்மறையெச்சம், உம்மையெச்சம் எனவெ. னெச்சம், சொல்லெச்சம் என வரும் எட்டும் சொல்லெச்சங்களாகும், அச்சூத்திரத் திற் குறிப்பு’ என்று ஒதப்பட்ட ஒன்றுமே குறிப்பெச்சம் எனப்படும். 2. முடித்தலைக்கொள்ளும் இயல்பு எனவே, செய்யுளின் வேறாகக் சொல்லும் குறிப்பும் எச்சமாய் நின்று பின்னர்க் கொணர்ந்து முடிக்கப் பெறும் என்பதாம் .