பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/773

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీః శ్రీ ఫ్రీ தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் ஓரிடம் நாட்டி அவ்விடத்துக் கூறுவார்க்குங் கேட்பார்க்கு மேற்ற செய்யுட்கு ஈடாகச் சொல்லுவது முன்னம் (எறு). ‘இவரிவர்க் குரியவென்று அறிவான், செய்யுட் கேட்டா னெனவும், அவ்விடத் தவரவர்க் குரைக்கவென்றான் ஆசிரிய னெனவுங் கொள்க. என்றென்பது எனவென்பதுபோலச் சொல்லினெச்சமாதலும் வினையெச்சமாதலும் உடைமையின் இஃது, 'எனவே னெச்சம் வினையொடு முடிமே” (தொல்-சொல் எச் 42) என்பதொரு வினையெஞ்சி நிற்கும். அவ்வினைதான் எச்சமாக லான் உரைப்பதென்னும் வினைகொண்டு முடியுமென்பது. “யாரிவ னெங்கூந்தற் கொள்வா னிதுவுமோ ரூராண்மைக் கொத்த படிறுடைத்து’ (கவி: 89) என்றக்கால் இம்மாற்றஞ் சொல்லுகின்றாள் தலைவி யெனவுஞ் சொல்லப்பட்டான் தலைமகனெனவும் முன்னத்தான் அறியப் படுத்தலின் இது முன்னவுறுப்பாயிற்று 2 ஒழிந்தனவற்றிற்கும் இஃதொக்கும். இவையெல்லாம், அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவாகக் கூறுகின்றானென்பது.? (உoஎ) நச்சினார் த்தினியம் : இது முன்னமென்கின்ற உறுப்புக் கூறுகின்றது. (இ-ள்) இவ்விடத்துத் தோன்றிய இம்மொழி கூறற்குரி யோருங் கேட்டற்குரியோரும் இன்னாரென்று அச்செய்யுட்கட் டோன்றின் அறியாமற் றானங்கண மறிதற் குரித்தாக நாட்டிய —- @ānīšâ கூறுதற்குரியார் இவர். இம்மொழியினைக் கேட்டற் குரியார் இவர் என உய்த்துணர்ந்து அறிபவன் செய்யுளைக் கேட்டவன் எனவும் அங்ஙனம் அறிந்து கொள்ளுதற்கோர் இடத்தினை யமைத்துக் கூற்று நிகழ்த்து வார்க்கும் அதனைக் கேட்போர்க்கும் உரியவற்றை உறை க்க எனச் செய்யுள் செய்வார்க்கு அறிவுறுத்தியவர் இந்நூலாசிரியர் எனவும் இச்சூத்திரத் தொடரைப் பகுத்துப்பொருள் கொள்க என்பதாம். 2. இதனைக் கூறுகின்றார். இவர், கேட்கின்றார் இவர் என்பதனை முன்னியுணர அறிவுறுத்துவது முன்னம் என்னும் உறுப்பாகும். முன்னம். குறித்துணரப்படுவது. 3. இடம், காலம், பயன், மெய்ப்பாடு, எச்சம், முன்னம் எனப்படும் செய்யுளுறுப்புக்களாகிய இவை யாவும் அகத்தினைச் செய்யுட்கும் புறத்தினைச் செய்யுட்கும் பொதுவாகக் கூறுகின்றார் தொல்காப்பியனார்.