பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/775

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கசுச தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் உள. இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும் ஒழுக்கமும் என்றிவை இழுக்குநெறி யின்றி இதுவா கித்திணைக் குரிப்பொருள் என்னாது பொதுவாய் நிற்றல் பொருள்வகை என்ப. இனாம்பூரணம் : என்- எனின் நிறுத்தமுறையானே பொருள் வகை பாமாறு: உணர்த்துதல் துதவிற்று. - (இ-ள்) இன்பமுந் துன்பமும் புணர்வும் பிரிவும் ஒழுக்கமு மென்று சொல்லப்பட்டவை வழுவுநெறியின்றி இத்தினைக்குரிய பொருள் இப்பொருளென்னாது எல்லாப் பொருட்கும் பொதுவாகி நிற்கும் பொருளே பொருள்வகையாம் என்றவாறு.2 (உ00) இது, பொருள்வகை கூறுகின்றது. (இ-ள்.) இன்பமுந் துன்பமும் புணர்தலும் பிரிதலும் ஒழுக்கமுமெனப்பட்ட இவை இழுக்காதவாற்றான் இத்திணைக்கு இது பொருளென்று ஆசிரியனோதிய உரிப்பொருளன்றி அவற் றுக்கெல்லாம் பொதுவாகப் புலவனாற் செய்யப்படுவது பொருட் கூறெனப்படும் (எ -று).3 "வகை"யென்றதனாற் புலவன்றான் வகைந்ததே பொரு ளென்று கொள்க. அஃதன்றிச் செய்யுள் செய்தலாகாதென் பது இதன் கருத்து. அவை, எனாது என்பதும் பாடம். ". இத்திணைக்குரிய பொருள் இதுவெனச் சுட்டிக்கூறுதலன்ற எல்லாத்தினைத் குரிய பொருள்களுக்கும் பொதுவாக நிற்கும் வண்ணம் புலவனால் அமைத்துக் கொள்ளப்படும் பொருட்பகுதி பொருள்வகை’ என்னும் உறுப்பாகும் என்பதாம். .ே ஆசிரியன் கூறிய உரிப்பொருளேயன்றி அவற்றுக்கெல்லாம் பொதுமையின் உரியவாகப் புலவனால் வகுத்துரைக்கப்படும் பொருளமைப்பு பொருள்வகை, என்னும் செய்யுளுறுப்பாகும். 4. பொருள் என்னாது 'பொருள்வகை" என விரித்துரைத்தமையால் செய்யுள் செய்யும் புலவன் தானே வகுத்தமைத்தது பொருள்வகையெனப்படும். புலவனது படைப்பாற்றலைப் புலப்படுத்தும் பொருள்வகை எனப்படும் உறுப்பின்றிச் செய்யுள் செய்தல் புலமையாகாது என்பது கருந்து. வகைந்தது. வகுத்துக்கூறியது.