பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/777

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூகக தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரை வளிம் என்றாற்போலப் புலவன் வகுப்பனவாம். இப்பாட்டுப் பாலை யேனும் முல்லை முதலியனவற்றிற்கும் இப்பொருள் பொதுவாம். பொதுமையென்றது எல்லாவுரிப்பொருட்கு மேற்றுப் பலவேறு வகையாகச் செய்தல். இவ்வாறு வருவன புறப்பொருள் கூறியவற்றுள்ளுங்காண்க. ஆய்வுரை : இது, பொருள் வகையாமாறு இதுவென உணர்த்துகின்றது. (இ-ஸ்) இன்பமும் துன்பமும் புணர்தலும் பிரிதலும் ஒழுக்கமும் எனப்பட்ட இவை வழுவாத நெறியால் இத்திணைக்கு இது பொருள் என ஒதிய உரிப்பொருளன்றி எல்லாவுரிப்பொருட்கும் ஏற்பப் (புலவரால் தோற்றிக் கொள்ளப்பட்டுப்) பொதுவாகி நிற்கும் பொருளினைப் பொருள்வகை யென்பர் ஆசிரியர் எ-று. செய்யுள் செய்யும் புலவன் தன் புலமைத் திறத்தால் தானே வகுத்துக் கூறும் பொருட்கூறு அனைத்தும் பொருள்வகை யென்னும் இவ்வுறுப்பின்பாற் பட்டு அடங்கும் என்பது பேராசிரியர் கருத்தாகும். உளக. அவ்வவ மாக்களும் விலங்கும் அன்றிப் பிறவவண் வசினுங் திறவதின் நாடித் ? தத்தம் இயலான்: மரபொடு முடியின் அத்திறந் தானே துறையெனப் படுமே. இனம்பூரணம் : எனின்-எனின். நிறுத்தமுறையானே துறையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ.ஸ்) அகப்பொருலாகிய ஏழு பெருந்திணைக்கும் புறப்பொருளாகிய ஏழு பெருந்திணைக்குமுரிய மாந்தரும் பரந்து பட்ட மாவும் புள்ளும், உம்மையால் மரமுதலாயினவும், பிறவ. 1. அவ்வவமாக்களும்' என்பது, பழைய அச்சுப்புத்தகத்திலுள்ள பாடம். அவ்வம்மாக்களும்' என்பது பேராசிரியருரையிலுள்ள பாடம். அவ்வம்மக்களும் என்பதே இளம்பூரணர் கொண்டபடம் என்பது ஏழு பெருந்திணைக்குரிய மாந்தரும் எனவரும் உரைத்தொடரால் புலனாம். 2. திறவதின் நாடுதலாவது, பல்வேறு கூறுபாடுடையதாகப் பகுத்து ஆராய்தல். 3. தத்தமியலின் ' என்பது பேராசிரியருரையிலுள்ள பாடம்.