பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா அ ੰ 'வேலாண் முகத்த களிறு” (திருக்குறள். 500) எனவும், இடையும் இறுதியுங் குற்றுகரம் நிரைபசையாயினவாறு. மருங்கினுமென்ற உம்மையான் அடியிற்றேயன்றி மொழி யீற்றும் அவற்றிறுதி கெடநின்ற மொழிக்கண் இடைநின்ற உகரம் இறுதியாகி உரியசையாகுவனவும் உளவென்பது கொள்க. ുiഞ ബ്, Galá+' எனவுங், 'கோலுகடல் எனவும், 'உலவுகடல்’ எனவும், விரவுகொடி’ எனவுங், “கலனளவு நலனளவு” எனவுஞ், "கரும்புலவு நறுந்தொடையலள்’ எனவும் வரும். இவை ஈற்றுநின்ற மகரங்கெட்டு உகர வீறாயின. இவற்றுள் திரைபசை யுகரங்களை ஆகார வீற்றுப்புணர்ச்சி யுகரமென்னா மோவெனின், என்னாமன்றே; வருமொழியொற்று மிகாமையி னென்பது. "உலவுக்கடல்' 'விரவுத்தளை' யெனின், அவ்வாறே யமையுமென்பது. மருங்கென்றதனான் ஈற்றடிக்கண்ணும் இறுதிக்கண்ணே முற்றுகரம் விலக்குண்ட தெனக்கொள்க. என்றார்க்குப், 'புனைமலர்த் தாரகலம் புல்லு' (யா. வி. ப. 58) எனவுங், 'கண்ணாரக் காணக் கதவு” (முத்தொள்ளாயிரம். 42) எனவும் வருமாலெனின் அவை மருஉ வழக்கென்க. இ நச்சினார்க்கினியம் : இது குற்றியலுகரத்திற் கினமாகிய முற்றுகரத்திற்கு இலக்கணங் கூறுகின்றது.