பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/789

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీ శ ఆ தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் ஆய்வுரை இது, வண்ணம் ஆமாறு உணர்த்துகின்றது. (இ-ள்) வண்ணமாவன இருபது வகைப்படும் என்பர் ஆசிரியர். எ-று. வண்ணம் என்பது, பாவின்கண்ணே நிகழும் ஒசை விகற். பமாகிய சந்தவேறுபாடு. அவை பின்வரும் சூத்திரங்களில் விரித்துரைக்கப்படும். உளரு. அவைதாம் பாஅ வண்ணம் தாஅ வண்ணம் வல்லிசை வண்ணம் மெல்விசை வண்ணம் இயைபு வண்ணம் அளபெடை வண்ணம் நெடுஞ்சீர் வண்ண்ம் குறுஞ்சீர் வண்ணம் சித்திர வண்ணம் நவிபு வண்ணம் அகப்பாட்டு வண்ணம் புறப்பாட்டு வண்ணம் ஒழுகு வண்ணம் ஒருஉ வண்ணம் எண்ணு வண்ணம் அகைப்பு வண்ணம் துங்கல் வண்ணம் ஏந்தல் வண்ணம் உருட்டு வண்ணம் முடுகு வண்ணமென்று ஆங்கென மொழிய! அறிந்திசி னே ரே. இளம்பூரணம் : என்- எனின். வண்ணத்திற்குப் பெயர் கூறுதல் நுதலிற்று, இதுவுஞ் சூத்திரத்தாற் பொருள் விளங்கும். (உ0ரு) இது, மேற்கூறப்பட்ட வண்ணங்களது பெயர் வேறுபாடு கூறுகின்றது. (இ.ஸ்) மேற்சொல்லிய நாலைந்து வண்ணமும் இவ்விருபது பெயர் வேறுபாட்டினவென்று சொல்லுப அவற்றை உணர்ந்த ஆசிரியர் (எ-று). இது, முறையாயினவாறென்ைையெனின், இது, வரலாற்று முறைமையென்றற்கு ஆங்கனம் மொழிப அறிந்திசினோ. ரென்றானென்பது. அவையா மாறு சொல்லுகின்றான். (உகக.) 1. "ஆங்கனமொழிப' எனப் பேராசிரியரும், ஆங்ங்னமறிப, என நச்சினார்க் கினியரும் பாடங்கொள்வர். ஆங்கு. அத்தன்மைய அறிந்திசினோர்-அறிந்தோர். 3. ஆங்ஙனம்-அம்முறைப்படி, வரலாற்றுமுறைப்படி, ஆங்கென என்பது இளம்பூரணருரையிலுள்ள பாடமாகும்.