பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/791

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூஅம் தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவ ளம் (இ . ள்) பாஅவண்ணமென்பது, நூற்பாவண்ணம் (எ-று) எற்றுக்கு? 'நூற்பாற்பயிலுமென்றமையின். இது சொற் சீரடித்தாகி வருமென்பது. இதனுட் பயிலுமெனவே அந்நூற் பாவினுளல்லது அகவலுள் இத்துணைப் பயிலாதென்பது; இது, "வடவேங்கடந் தென்குமரி” (தொல் : பாயிரம்) எனவும், “எழுத்தெனப் படுப அகரமுத னகர விறுவாய் முப்பஃ தென்ப" (தொல் எழுத்து-நூன் : 1) எனவும், “அவற்றுள், அஇஉ. எஒ என்னு மப்பா லைந்தும்’ (தொல்-எழுத், நூன்: 3) என்பது சொற்சீராகி அகவலுட் பயிலாது வந்தது. சொற்சீரடி யென்னாது, சொற்சீர் என்றான் அடியோடு தொடராதுஞ் சொற்சீர் வருமாதலினென்பது, அவை, 'நன்றுபெரி தாகும்” (தொல்-சொல்-உரிச்: 45) என்றாற்போல வேறாகி நிற்பன. கலியுள்ளும் பரிபாடலுள்ளுஞ் சொற்சீர்வருமென மேற்கூறினானாகவின் அவற்றுள்ளுஞ் சந்தவேற்றுமைப்பட்டன பாஅவண்ணமேயா மென்பது. (உகச) গুঞ্জ ঞ্জ কে স্ট্রঞ্চস্তf" sub : 206முதல் 210 வரை ஐந்து சூத்திரங்கட்கு உரையில்லை ஆய்வுரை : இது, பா அவண்ணம் ஆமாறு கூறுகின்றது. (இ.ஸ்) அவற்றுள், பாஅவண்ணம் என்பது சொற்சீரடியினை யுடையதாகி நூற்பாவாகிய சூத்திரத்தின்கண் பயின்று வரும் எறு. ஈண்டு நூல் என்றது, இலக்கணச் சூத்திரமாகிய நூற்பா வினையுணர்த்தி நின்றது. வண்ணங்களுக்குரிய உதாரணங்கள் முன்னைய உரைகளிற் காட்டப்பெற்றன. 1. நூற்பாப்பயிலும் என்றமையால் ஈண்டுப் பா என்றது. சூத்திரமாகிய நூற்பாவினை. நூற்பாப்பயிலும் என்பதே பேராசிரியர் கொண்ட பாடம் எனக்கருத வேண்டியுளது. 2. பயிலுதல் - பெரும்பான்மையாய் வருதல். நூற்பாவிற் சொற்சீர்த்தாகிப் பயிலும் எனவே ஆசிரியப் பாவில் சொற்சீர் அத்துணைப் பயிலாது என்பதாம்.