பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/804

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் நூற்பா - உன்சு கூ கூங் 'கோடுயர் வெண்மண லேறி யோடுகலன் எண்ணுந் துறைவன் றோழி; எனவும், "ஆணமில் லபாருளெமக் கமர்ந்தனை யாடி’ (கலி: கடவுள் வாழ்த்து) எனவும், 'சென்றி பெருமநிற் றகைக்குநர் யாரோ' - (அகம்-46) எனவும், இவை ஆசிரிய ஈற்றன. "குளிறு குரலருவிக் குன்றத் தி தண்மேற் களிறு வருவது கண்டு-வெளிலென்ன லாயினான் பின்னையணங்கிற் குயிரளித்துப் போயினான் யாண்டையான் போன்ம்' என இதனுள் இறுதியடி முடியாத்தன்மையின் முடிந்ததாகலின் அகப்பாட்டு வண்ணமாயிற்று. “கொடி யுவனத் தவணரோ” எனக் கலிப்பாவுள் அரோவந்து பின் முடியாத்தன்மையின் முடிந்தது. ஆ ஈ ஊ ஏ ஐ ஒ என்பனவற்றான் ஆசிரியம் இறுமென வரையறுப்பாருண்மையின் அவ்வச் சொல்லானே. அவை முடிந்தனவென்று கொள்வலெனின்-அங்ங்னம் வரையறையில் வென்பது மேற்காட்டிய உதாரணங்களால் அறிந்தாம்ாகலின் அக்கடா வண்ண்மென வரையறுப்பார் மேற்றென விடுக்க: நச்சினார்க்கினியம் : இஃது அகப்பாட்டுவண்ணங் கூறுகின்றது. (இ-ள்). அகப்பாட்டுவண்ணமாவது முடித்துக்காட்டாத் தன்மையாலே முடிந்ததன்மேலே நிற்பதாம். எறு: 1. ஆ ஈ ஊ ஏ ஐ ஒ என்பனவற்றால் ஆசிரியப்பா முடியும் என்னும் வரையறை பொருந்தாதென்பது இவ்வுரையில் எடுத்துக்காட்டிய ஆசிரியப்பாக் களாற் புலனாகும், ஆகவே ஆ ஈ ஊ ஏ ஐ ஒ என்னும் ஈற்றால் ஆசிரியம் முடியும் என்னும் அவ்வரையறை பொருந்துமர் என்னும் வினா வண்ணத்தை வரையறுப் போர் கேட்டற்குரிய எதிர் வினாவாகும் என்பதாம். 2. செய்யுளின் இறுதியடிபோலும் முற்றோசை பெறாது இடையடி போல மேலுந் தொடரு மோசையினதாய் நிற்றல் அகப்பாட்டு வண்ணம் என்பது கருத்து.