பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/807

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூகசு தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் நச்சினார்க்கினியம்: இது புறப்பாட்டு வண்ணங் கூறுகின்றது. (இ-ன்.) புறப்பாட்டு வண்ணமாவது இறுதியடிப் புறத்ததாகவுந் தான் முடிந்ததுபோன்று நிற்றல். எறு. : 'இன்னா வைகல் வாரா முன்னே செய்ந்நீ முன்னிய வினையே முந்நீர் வரைப்பக முழுதுடன் றுறந்தே' (புறம் கடக உ) 'முன்னியவினையே’ முடிந்ததுபோன்று முடி யாதாயிற்று. ஆய்வுரை : இது, புறப்பாட்டு வண்ணம் ஆமாறு கூறுகின்றது. (இ-ஸ்) புறப்பாட்டு வண்ணமாவது முடிந்தது போன்று முடியாததாகி வருவது எ-று. அஃதாவது பாட்டின் முடிபினை யுணர்த்தும் இறுதியடி புறத்தே நிற்கவும் அதற்கு முன்னுள்ள இடையடி முடிந்தது போன்ற ஒசையினதாய் நிற்பது புறப்பாட்டு வண்ணமாகும் என்பதாம். 'இருங்கட லுடுத்தஇப் பெருங்கண் மாநிலம் (புறம்-363) எனவரும் புறப்பாடலில், ‘இன்னாவைகல் வாரா முன்னே செய்ந்நீ முன்னிய வினையே முந்நீர் வரைப்பகம் முழுதுடன் றுறந்தே" என்புழி, ஈற்றயலடி முன்னிய வினையே’ என முடிந்தது போன்று நிற்பினும், முடிவு பெறாது 'முந்நீர் வரைப்பகம் முழுதுடன் துறந்தே என ஈற்றடியைக் கொண்டு பொருள் முடிவுபெற வேண்டுதலின், இது முடிந்தது போன்று முடியாதாகிய புறப்பாட்டு வண்ணத்திற்கு உதாரணமாயிற்று. 1. பாட்டினை முடிக்கும் இறுதியடி பின்தொடரும் நிலையிலும் அதற்கு முன்னுள்ள அடி முடிந்தது போன்று முற்றிய ஒசையினதாய் வருவது புறப்பாட்டு வண்ணம் என்பதாம்.