பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/809

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூகஅ தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் ஒழிந்தனவும் ஒழுகுமேனும் அவற்றின் வேறிலக்கணமுடைய. 'அம்ம வாழி தோழி காதல ரின்னே பனிக்கு மின்னா வாடையொடு புன்கண் மாலை யன் பின்று நலிய வுய்யல ளிவளென் றுணரச் சொல்விச் செல்லுநர்ப் பெறினே சேய வல்ல வின்னினி யிறந்த மன்னவர் பொன்னணி நெடுந்தேர் பூண்ட மாவே" எனவரும். ஆய்வுரை : இஃது ஒழுகுவண்ணம் ஆமாறு கூறுகின்றது. (இ.ஸ்) ஒழுகு வண்ணமாவது (யாற்றொழுக்குப் போன்று தொடர்ந்து) ஒழுகிய ஒசையால் இயன்றதாகும் எறு. உ-ம். யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வாரா என வரும். உகக. ஒருஉ வண்ணம் ஒருஉத்தொடை தொடுக்கும்? இளம்பூரணம் : என்- எனின். ஒரூஉ வண்ணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஒரூஉ வண்ணமாவது நீங்கின. தொடையாகித் தொடுப்பது என்றவாறு. அது செந்தொடையாம்." உ-ம் “தொடிநெகிழ்ந் தனவே கண்பசந் தனவே யான்சென் றுரைப்பின் மாண்பின் றெவனோ சொல்லாய் வாழி தோழி வரைய 1. இது பேராசிரியர் தரும் விளக்கத்தை அடியொற்றியது. யாற்றொழுக்குப் போல ஒழுகும் ஒசையினையுடையது ஒழுகு வண்ணம் எனக்கொள்க. 2. ஒரூஉ வண்ணம் ஒரீஇத் தொடுக்கும் எனப் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் பாடங்கொண்டனர். ஒருஉதல்-நீங்குதல் செய்யுட்குரிய மோனையெதுகை முதலியன நீங்கிய நிலையில் தொடுக்கப்படும் ஒசைத்திறம் ஒருஉ வண்ணம் எனப்படும். 3, செந்தொடையால் வருவது ஒரூஉவண்ணமாம் என்பது இளம்பூரணர் கருத்தாகும்.