பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/811

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$OOKy தொல்காப்பியம்-பொருளதிகாரம் - உரைவளம் நச்சினார்க்கினியம் : இஃது ஒருஉவண்ணங் கூறுகின்றது. (இ.ஸ்) ஒரூஉவண்ணமாவது யாற்றொழுக்குப்போலச் சொல்லிய பொருள் பிறிதொன்றினை யவாவாமை அறுத்துச் செய்வது. எ-று, "யானேயிண்டை யேனே யென் னலனே யானா நோயொடு ... ... மன்றத் தஃதே' (குறுந்-கூ எ) என வரும். "சிறிய்கட் பெறின்ே யெமக்கீயு மன்னே பெரியகட் பெறின்ே” (புறம்-உங்ரு) என்பதுமது. இஃது யாப்புப்போலப் பொருணோக் கோசையே கோடலானும் அடியிறந்து கோடலானும் யாப்பெனப்படாது. இனியெல்லாத் தொடையும் ஒரீஇச் செந்தொடையாற் றொடுப்பது ஒருஉவண்ணமெனக்கூறிப் பூத்த வேங்கை” என்பது உதாரணங்காட்டுவது தொடைப்பகுதியாம்: ஆய்வுரை : இது ஒருஉ வண்ணம் ஆமாறு கூறுகின்றது. (இ.ஸ்) ஒருஉ வண்ணமாவது ஒரு உத்-தொடை தொகுத்து வருவதாகும் எ-று. ஒருஉத் தொடையாவது நடு இருசீர்க்கண்ணும். இன்றி முதற்சீர்க்கண்ணும் நாலாஞ்சீர்க்கண்ணும் மோனை முதலாயின வரத் தொடுப்பதாகும். இருசீர் இடையிடின் ஒருஉவென மொழிப” (செய்யுள் 95) என்பது தொல்காப்பியம். (உ-ம்.) அம்பொற் கொடிஞ்சி நெடுந்தே ரகற்றி என்றாற்போன்று ஒரூஉத் தொடை யமைய வருவது ஒரூஉ வண்ணமாகும். இனி, ஒரு உத்தொடை என்பதற்கு நீங்கிய தொடை' அஃதாவது செந்தொடை எனப் பொருள் கொள்வர் இளம்பூரணர். ஒரூஉ வண்ணம் ஒரீஇத்தொடுக்கும்’ எனப் 1. இங்கனம் காட்டுபவர் பிற்கால யாப்பிலக்கணம் வுரையாசிரியர்கள், செந்தொடை என்பது தொடைப்பகுதியாதலின் அதனை வண்ணத் திற்கு உதாரணங் காட்டுதல் பொருந்தாது என்பதாம்.