பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/814

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா உஉக இ00ங், உ உக அகைப்பு வண்ணம் அறுத்தறுத் தொழுகும், இனம் பூரணம் : என்-எனின். அகைப்பு வண்ணம் உணர்த்துதல் நுதலிற்று , (இள். அறுத்தறுத் தியலுவது அகைப்பு வண்ணமாம் என்றவாறு.1 (உ-ம்) தொடுத்த வேம்பின்மிசைத் துதைந்த போந்தையிடை அசைத்த வாரமலைப் பட்டு ரண்னலென்பான் இயன்ற சேனைமுர சிரங்குந் தானையெதிர் முயன்ற வேந்தருயிர் முருக்கும் வேலினவன்” & (யாப். வி. ப. க. அன்) (உ.உக) எனவரும. (இ-ள்) அறுத்தறுத்துப் பயில்வது அகைப்புவண்ணம் எறு. இது விட்டுவிட்டுச் சேறலின் அகைப்புவண்ணமென்னும் பெயர் பெற்றது. 'வாரா ராயினும் வரினு மவர் நமக் கியாரா கியரோ தோழி' (குறுந்-110) என்புழி, ஒருவழி நெடில் பயின்றும் ஒருவழிக் குறில் பயின்றும் அறுத்தொழுகிய அகைப்புவண்ணமாம்.2 (உ.உக) இஃத அகைப்புவண்ணங் கூறுகின்றது. (இ-ஸ்.) அகைப்புவண்ணமாவது விட்டுவிட்டுச் சொல்லும் ஓசையையுடையது. எ-று அகைத்தல் அறுத்தலாதலிற் காரணப்பெயர். ஒருவழி நெடில் பயின்றும் ஒருவழிக் குறில்பயின்றும் அற்றும் வருவது. 1. அகைத்தல்-தொடர்த்துசெல்லும் ஒசையினை இடையிடையே துணித்து நிறுத்தல். 2. அகைத்தல்-பிளவுபட அறுத்தல்; வாராராயினும் என ஒருவழி நெடில் பயின்றும், வரினும் என ஒருவழிக் குறில் பயின்றும் ஒசையறுத்து நிற்றலின் இஃது அகைப்பு வண்ணமாயிற்று.