பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/815

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த00ச தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் 'வாரா ராயினும் வரினு மவர் நமக் கியாரா கியாரோ தோழி' (குறுந்-க கC) எனவரும். "தொடுத்தவேம் பின்மிசைத் துதைபோந் தையிடை யடுத்தவ ரருமலை யட்டுண் டுண்ண லென்பா னியன்ற வேனை முயற்சி யம் பசும்பு தானை யெதிர்முயன்ற வேந்த ருயிர்முடிக்கும் வேவின் னவன்' என்பது மது. ஆய்வுரை : இஃது, அகைப்பு வண்ணம் ஆமாறு கூறுகின்றது. (இ.ஸ்) அறுத்தறுத்தொழுகும் ஒசையினதாய் வருவது அகைப்பு வண்ணமாகும் எாறு, அறுத்தறுத்தொழுகலாவது, விட்டுவிட்டுச் செல்லுதல். ஒருவழி நெடில் பயின்றும் ஒருவழிக் குறில் பயின்றும் வருதல் இதன் இயல்பாகும். 1. இச்செய்யுள் யாப்பருங்கலவிருத்தியிற் பின்வருமாறு காணப்படுகிறது, தொடுத்த வேம்பின் மிசைத்துதைந்த போந்தை: அடைய அசைத்த ஆர்மலைப் பாட்டூர் அண்ணல் என்போன் இயன்ற சேனை முரசிரங்கும் தானையெதிர் முயன்ற வேந்தருயிர் முருக்கும் வேலின்ை னவன்' எனவரும். இங்ங்னம் அமைந்த செய்யுளமைப்பில் அறுத்தறுத்துச் சொல்லுமோசையாகிய அகைப்பு வண்ணம் புலப்படவில்லை. எனவே இச்செய்யுள் வடிவம் ஏடெழுதுவேரால் அடிபிறழ்ந்து வாசிக்கப்பெற்றதெனக் கருத: வேண்டியுள்ளது. யாப்பருங்கல விருத்தியிலும் தச்சினார்க்கினிய ருரையிலும் காணப்படும் இச்செய்யுளடிகளை ஒப்புநோக்கி, தொடுத்த வேம்பின்மிசைத் துதைந்த போந்தையிடை அடுத்தவ ரருமலை யட்டுண் டுண்ண ஆர்மலைப் பாட்டுர் அண்ண வென்பான் இயன்ற சேனைமுர சிரங்குத் தானையெதிர் முயன்ற வேந்தருயிர் முடிக்கும் வேலின்னவன்' என அடிவரையறை செய்யின் இச்செய்யுள், விட்டுவிட்டுச்செல்லும் ஒசையாகிய அகைப்பு வண்ணத்திற்கு இலக்கியமாதல் நன்கு புலனாம்.