பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/821

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க00ம் தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் அதி, “நெறியறி செறிகுறி புரிதிரி பறியா வறிவனை முந்து lஇத் தகைமிகு தொகைவகை யறியுஞ் சான்றவ ரினமாக வேய்புரை மென்றோட் பசலையு மம்பலும்” எனவரும். (கலி: 39) இவற்றைக் கொச்சகம் அராகம் (செய் எஉக) எனவுஞ் 'சொற்சீரடியும் முடுகியலடியும் (செய் ள உஉ} எனவும் பரிபாடற்கு வேறுபடுத்தோதினான்.இவ்வேறுபாடு நோக்கியென்பது. (உங் கி.) நச்சினார்க்கினியம் : இது முடுகுவண்ணங் கூறுகின்றது. (இ-ஸ்)முடுகுவண்ணமாவது முடுகியல்தொடுத்த அடியோடு பிறவடி வேறுபடத் தொடர்ந்தோடுவது. எ-று. உ-ம். "நெறியறி செறிகுறி புறிதிரிபு” (கலி-ங் கூ) என்னுஞ் சுரிதகமும், 'இரிபெழு பதிர்பதிர் பிகந்து” (கலி-கoச) என்பது முதலியனவுமாம். இவை வேறுபாடு நோக்கி' யிதனைச் சொற்சீரடியும் முடுகியலடியுமெனப் பரிபாடற்கு விதந்தோதினார். ஆய்வுரை : இது, முடுகு வண்ணம் ஆமாறு கூறுகின்றது. (இ.ஸ்) நாற்சீரடியின்மிக்கு ஒடி உருட்டு வண்ணத்தை யொத்து அராகந் தொடுத்து வருவது முடுகு வண்ணம் எனப்படும் எ-று. உதாரணம் முன்னைய உரைகளிற் காட்டப்பெற்றது. (முன்பக்கத் தொடர்ச்சி) நாற்சீரடியினைக் கடந்து விரைந்த ஒசையினதாய் வருவது முடுகுவண்ணம் எனவும் இவ்விரண்டற்குமுள்ள வேறுபாட்டினை விளங்கயுணர்த்தியவாறு நன்கு பெறப்படும். அராகந்தொடுத்த அடியொடு பிறவடி தொடர்ந்தோடுவது' எனவும் பாடம் உண்டு. முடுகுவண்ணம்' என்பது, அடியற்ற வழி அறியலாகாதாய் நீண்ட அடித்தாய் அராகம் தொடுத்து வருவது. என்னை? 'முடுகு வண்ணம் முடிவறி யாமல் அடியிறந் தொழுகு மதனோ ரற்றே என்றாராகலின் என வரும் யாப்பருங்கலவிருத்தியுரையில் இத்தொல்காப்பியச் சூத்திரம் பாடவேறுபாட்டுடன் எடுத்தாளப் பெற்றுள்ளமை ஒப்புநோக்கியுணரத் தகுவதாகும். 1. இவ்வேறுபாடு நோக்கி" என்றிருத்தல் வேண்டும்,