பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/823

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க0கஉ தொல்காப்பியம் - பொருளதிகாரம் -உரைவளம் மெல்லாவற்றோடும் உறழ்ந்து பெருக்கின் எத்துணையும் பலவா கலும், இனிப் பிறவாற்றாற் சில பெயர் நிறீஇ அவற்றால் உறழ்ந்து பெருக்க வரையறையிலவாகலும் உடையவாயினும் இவ்விருபது வகையானல்லது சந்தவேற்றுமை விளங்காதென்பது கருத்து. (உங்ச} நச்சினார்க்கினியம் : இது புறனடை (இ.ஸ்). சந்தவேற்றுமை செய்வன இவையல்லது வேறில்லை. எ து வண்ணமாவது சந்தம், தாமேயென அவற்றின் சிறப்புக் கூறிற்று. இதன் கருத்துப் பாக்களோடும் பிறவற்றோடும் உறழ அது பலவகைப்படுத்தினால் வரையறையின்றா மாயினும் அவை யெல்லாம் இருபதின் கூறாகிய சந்தவேற்றுமை யாவதல்லது சந்தவேற்றுமை விளங்காவாறாயிற்று. cষ্ট্র, ৫২ চেষ্ট্য : இது, வண்ணத்திற்குரிய புறனடை, (இ-ள்) வண்ணங்களாவன இவையே எனக்கூறுவர் ஆசிரியர் எஉறு. "இவை என்றது பாஅவண்ணம் முதலாக முடுகு வண்ண மீறாக மேற்கூறிய இருபது வண்ணங்களையும், வண்ணம் என்பன சந்த ஒசையாதலால் அவ்வோசை வேற்றுமை செய்வன மேற் கூறிய வண்ணங்கள் இருபதுமேயன்றி வேறு இல்லை என்பது இச்சூத்திரத்தின் கருத்தாகக் கொள்வர் பேராசிரியர். வண்ணம் இருபது என்னும் இப்பொருண்மை மேலே பெறப்பட்டதாயினும் இன்னும் தொடையினாற் பாகுபடுக்க வண்ணம் பலவாய் விரியும் என்பது அறிவித்தல் இச்சூத்திரத்தின் பயன் எனக்கொண்டு, பிற்கால யாப்பிலக்கண நூலார் பெருக்கிக் கூறும் நூறு வண்ணங்களையும் குறிப்பிடுவர் இளம்பூரணர். 'குறில், நெடில், வல்லினம், மெல்லினம். இடையினம் என முதற்கண் நிறுத்தி அகவல், ஒழுகிசை, வல்விசை, மெல்லிசை என்னும் நான்கினோடும் உறழ இருபதாகும். அவற்றைத் தூங்கிசை, ஏந்திசை, அடுக்கிசை, பிரிந்திசை, மயங்கிசை என்பன. 1. பேராசிரியர் உரையினை அடியொற்றியமைந்தது.