பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/825

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆ0கச தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் உஉஎ சின்மென் மொழியால் சீர்புனைந் தியாப்பின் அம்மை தானே அடிநிமிர் வின்றே. இளம்பூரணம் : என்.எனின். நிறுத்தமுறையானே அம்மையாகிய செய்யுள் உணர்த்துதல் நுதலிற்று. (இ.ஸ்) சிலவாய் மெல்லியவாகிய மொழியினானே தொடுக் கப்பட்ட அடிநிமிர்வில்லாத செய்யுள் அம்மையாம் என்றவாறு.” உ-ம் "அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதினோய் தன்னோய்போற் போற்றாக் கடை” (குறள். ந. கரு) எனவரும். (உ.உ5: } இது தொகைச் சூத்திரத்துள், "ஆறுதலை யிட்ட வந்நா லைந்தும்” (தொல்-செய்;1) எனக் கூறு செய்து நிறீஇப், பின்னர் எட்டுறுப்புக் கூறினா னன்றே? இவை அவற்றோடொத்த இலக்கணத்த அன்மையான்; என்னை? அவை ஒரோ செய்யுட்கே ஒதிய உறுப்பாகலானும் இவை பல செய்யுளுந் திரண்டவழி இவ்வெண்வகையும் பற்றித் தொடுக்கப்படுமெனக் கூறப்பட்டதாகலானுமென்பது. இவற்றை வனப்பென்று கூறப்படுமாறென்னை? அச்சூத்திரத்துப் பெற் நிலமாலெனின், வனப்பென்பது, பெரும்பான்மையும் பல உறுப்புந் திரண்ட வழிப் பெறுவதோ அழகாகவின் அவ்வாறு கோடும். அதனாற் பல செய்யுளும் உறுப்பாய்த் திரண்டு பெருகிய தொடர்நிலையதே வனப்பென்னும் பெயர்ப்பகுதி வகையான் j ஏற்பதென்பது. அஃதேல், இவ்வெட்டுந் தனிவருஞ் செய்யுட் 1. வனப்பியல் தானே வகுக்குங் காலை, சின்மென் மொழியாற் றாய பனுவலோ, டம்மை தானே யடிநிமிர் பின்றே, எனப்பாடங்கொள்வர் பேராசிரியர். சில்மொழி மென்மொழி எனத் தனித்தனி இயையும். அடிநிமிர்வு இன்று-அடிகள் ஏறி (மிக்கு) 2. சின்மென்மொழியாற் சீர்புனைத்து யாக்கப்பெற்று அடிநிமிர்வின்றி வருஞ்செய்யுள் அம்மையென்னும் வனப்புடைதாகும் என்பதாம். 3. செய்யுளியல் முதற்குத்திரத்தில் மாத்திரை முதலாகச் சொல்லப்பட்ட இருபத்தா றுறுப்புக்களும் ஒவ்வொரு செய்யுட்கும் இன்றியமையா தமைய வேண்டிய உறுப்புக்களாகும். அச்சூத்திரத்தில் அம்மை முதலாகப் பிற்கூறப்பட்ட எண்வகை புறுப்புக்களும் பல செய்யுளுந் திரண்டவழித் தொகுக்கப்படும் அழகிய