பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/830

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் நூற்பா - உஉள கCகக இவ்வகை வனப்புக்கள் உரியனவாகும். இங்ங்ணம் செய்யுளுறுப்புக்கள் முப்பத்து நான்கினையும் இருபத்தாறும் எட்டும் என இருதிறமாக வகுக்கவே இவற்றை யுறுப்பாகக் கொண்ட செய்யுட்கள் தனிநிலைச் செய்யுளும் தொடர்நிலைச் செய்யுளும் எனச் செய்யுள் இருவகையாகப் பகுக்கப்படும் என்றாராயிற்று. இச்சூத்திரம், எண்வகை வனப்பினுள் அம்மையென்னும் வனப்பு உணர்த்துகின்றது. (இ.ஸ்) சிலவாய் மெல்லியவாய சொற்களால் தொடுக்கப் பட்ட அடிநிமிர்வு இல்லாத செய்யுள் அம்மை யென்னும் வனப்புடையதாகும் எறு. "அம்மை என்பது குணப்பெயர். அமைதிப்பட்டு நிற்றலின் அம்மை யென்றாயிற்று' என்பர் பேராசிரியர். அடி நிமிராமை. ஆறடியின் மேற்படாமை. சிலவாதல், சுருங்கிய எண்ணினவாகிய சில சொற்களால் இயன்று வருதல். மெல்லியவாதல் சிலவாகிய அச்சொற்களும் பலவவெழுத்துக்களால் இயன்று விரிந்தனவா. காமல் சிலவெழுத்துக்களால் அமைந்து சுருங்கி நிற்றல், அறம், பொருள், இன்பம் என்னும் மூன்றற்கும் இலக்கணங்கூறுவன போன்றும் அன்றாகியும் இடையிட்டு நிற்கும் இயல்பினது என்பார். தாஅய பனுவல் என்றார். தாவுதல் - இடையிடுதல். அம்மை என்னும் இவ்வனப்பிற்கு, "அறிவினா னாகுவ துண்டோ பிறிதினோய் தன்னோய்போற் போற்றாக் கடை (315) எனவரும் திருக்குறளை உதாரணமாகக் காட்டினார் இளம்பூரணர். "அங்ங்னம் வந்தது பதினெண்கீழ்க்கணக்கு, அதனுள் இரண்டடியாயினும் ஐந்தடியாயினும் சிறுபான்மை ஆறடியாயினும் ஒரோ செய்யுள் வந்தவாறும், அவை சின்மென் மொழியால் வந்தவாறும், அறம்பொருளின்பத் திலக்கணங் கூறிய பாட்டுக்களும் பயின்று வந்தவாறும் இடையிடையே கார் நாற்பது, களவழி நாற்பது முதலியன வந்தவாறும் காண்க’ என நச்சினார்க்கினியர் விளக்குதலால், நாலடியார் முதலிய கீழ்க்கணக்கு நூல்கள் பதினெட்டும் அம்மையென்னும் வனப்பமைந்த இலக்கியங்கள் என்பது நன்கு புலனாம்.