பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/831

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க0 உம் தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் உ.உ.அ. செய்யுள்.மொழியால் சீர்புனைந்தியாப்பின் அவ்வகை தானே அழகெனப் படுமே. இனம்பூரணம் : என்-எனின் நிறுத்தமுறையானே அழகென்னும் செய்யுள் உணர்த்துதல் நுதலிற்று. (இ- ள்.) செய்யுட்குரிய சொல்லினாற் சிரைப்புணர்த்துத் தொடுப்பின் அவ்வகைப்பட்ட செய்யுள் அழகு எனப்படும் என்றவாறு: "துணியிரும் பரப்பகங் குறைய வாங்கி மணிகிளர் அடுக்கல் முற்றிய எழிலி காலொடு மயங்கிய கனையிருள், நடுநாள் யாங்குவந் தனையோ ஓங்கல் வெற்ப நெடுவரை மருங்கிற் பாம்பென இழிதருங் கடுவரற் கலுழி நீந்தி வல்லியம் வழங்குங் கல்லதர் நெறியே”. (யாப்.வி.ப. க.எ க} எனவரும். (உ.உ.அ) இஃது, இரண்டா மெண்ணுமுறைமைக்க ணின்ற அழ குணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) திரிசொற் பயில்ாது செய்யுளுட் பயின்று வரும் மொழிகளாற் சீரறுத்துப் பொலிவுபட்ட யாப்பின் பொருள் அழகு (எ-று). 'அவ்வகை'யென்றதனால் அவை வேறு வேறு வந்து ஈண்டிய் தொகைநிலைச் செய்யுளென்றவாறு. அவையாவன, நெடுந்தொகை முதலாகிய த்ொகையட்டு மென்றவாறு. அழகு செய்யுண் மொழி யென்ற தென்னையெனின், அது பெரும்பான்மையாற் கூறினான். அம்மொழியானே இடைச்சங்கத்தாருங் கடைச்சங்கத் தாரும் இவ்விலக்கண்த்தாற் செய்யுள் செய்தார்; இக்காலத்துச் 1. செய்யுள்மொழியாவன இயற்சொல், திரிசொல். திசைச்சொல், வடசொல் என்பன. 2. பொலிவுபட யாப்பின் (அப் பொருள் (வகை) அழகு. எ-று' என இவ்வுரைத் தொடர் அமைதல் பொருத்தமுடையதாகும்.