பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/838

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா உங்ல் கCஉன் வனப்புடைய செய்யுளாம் என்பர் தொன்மை நெறியுணர்ந்த புலவர் எறு. எனவே தோல் என்னும் வனப்பு இருவகைப்படும் என்பதாயிற்று. பாயிரும் பரப்பகம் என்ற முதற்குறிப்புடைய செய்யுள் இழுமென் மொழியால் விழுமியது நுவன்றது எனவும், 'திருமழை தலைஇய எனத்தொடங்கும் கூத்தராற்றுப்படை (மலைபடுகடாம்) பரந்த மொழியால் அடிநிமிர்ந்து வந்தது எனவும் உதாரணங் காட்டுவர் இளம்பூரணர். ‘யாப்பினும் பொருளினும் வேற்றுமை யுடையது' எனப்பட்ட கொச்சகத்தால் இயன்ற சீவக சிந்தாமணி போன்ற தொடர் நிலைச்செய்யுட்கள் இழுமென் மொழியால் விழுமியது நுவன்ற தோல் என்னும் வகையைச் சார்ந்தன எனவும், ஆசிரியப்பாட்டால் ஒரு கதைமேல் தொடுக்கப்பட்ட தொடர்நிலைச் செய்யுட்கள் பரந்த மொழியால் அடிநிமிர்ந்தொழுகிய தோல் என்னும் வகையின்பாற்படுவன எனவும் நச்சினார்க்கினியரும் பேராசிரியரும் கூறிய விளக்கம் இங்கு நோக்கதற் பாலனவாகும். 'செய்யுளியலின்கண்ணே ஆசிரியர் பாவும் இனமுமென நான்கி னிக்கிய பாவினைத் தொகை வரையறையால் இரண்டென அடக்கியும், விரிவரையறையான் ஆறென விரித்தும், அவற்றை அறம்பொருளின்பத்தாற் கூறுக என்றும் கூறிப் பின்பு அம்மை முதலிய எட்டு வனப்பும் தொடர்நிலைச் செய்யுட்கு இலக்கணமென்று கூறியவர். இழுமென் மொழியான் விழுமியது நுவலினும், பரந்த மொழியான் அடிநிமிர்ந் தொழு . கினும் என்பதனால் குவிந்து மெல்லென்ற சொல்லானும் பரந்து வல்லென்ற சொல்லானும் அறம் பொருளின்பம் பயப்ப வீடென்னும் மற்றும் இன்னோரன்ன செய்யுட்களானும் கூறுக என்றமையான், இத்தொடர்நிலைச் செய்யுள் அங்ங்னங் கூறிய தொடர்நிலை யெனவுணர்க’ எனச் சிலப்பதிகார உரைப் பாயிரத்தே அடியார்க்கு நல்லார் இச்சூத்திரப் பொருளைத் தெளிவாக விளக்கியுள்ளார். இவ்விளக்கத்தினைக் கூர்ந்து நோக்குங்கால் தொல்காப்பியனார் கூறிய தோல் என்னும் வனப்புக்குரிய இருவகை யியல்பும் ஒருசேரப்பெற்ற தொடர் நிலைச் செய்யுள் சிலப்பதிகாரம் என்பது நன்கு புலனாதல் காணலாம்.