பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/839

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கOஉஅ தொல்காப்பியம்- பொருளதிகாரம் - உரைவளம் உங்க. விருந்தே தானும் புதுவது புனைந்த யாப்பின் மேற்றே இனம் பூரணம் : என்-எனின், நிறுத்தமுறையானே விருந்தென்னுஞ் செய்யுள் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ன் ) விருந்தாவது முன்புள்ளார் சொன்ன நெறிபோய்ப் புதிதாகச் சொன்ன யாப்பின் மேலது என்றவாறு. புதிதாகப் புனைதலாவது ஒருவன் சொன்ன நிழல்வழி. யன்றித் தானே தோற்றுவித்தல்? அது வந்தவழிக் காண்க. இது பெரும்பான்மையும் ஆசிரியப்பாவைக் குறித்தது. (உங். க} (இ.ஸ்) விருந்துதானும் புதிதாகத் தொடுக்கப்படுந் தொடர் நிலை மேற்று (எ-று.) "தானு'மென்ற உம்மையான் முன்னைத் தோலெனப்பட்ட தூஉம் பழைய கதையைப் புதியதாகச் சொல்லியதாயிற்று. இது பழங்கதை மேற்றன்றிப் புதிதாகச் சொல்லப்படுதல் ஒப்புமையின் உம்மையான் இறந்தது தழிஇயினானென்பது. புதுவது கிளந்த யாப்பின் மேற்று' என்றதென்னையெனின், புதிதாகத் தாம் 1. கிளந்த' என்பது பேராசிரியர் நச்சினார்க்கினியர் உரையிலுள்ள பாடம் விருந்து-புதுமை; புதுமையான் இயன்ற யாப்பிற்கு ஆகுபெயர். 2. ஒருவன்சொன்ன நிழல்' என்றது, புலவனொருவன் இயற்றிய யாப்பின் சாயலை, நிழல்வழியன்றித் தானே தோற்றுவித்தல் என்பது, பிறறொருவர் செய்த யாப்பினை அடியொற்றிச் செய்தலன்றித் தானே புதியதொரு யாப்பினை அமைத்துக் கொண்டு செய்தல், திருஞானசம்பந்தப்பிள்ளையார் முதலிய அருளாசிரியர்கள் தாமே புதுவது புனைந்த சொன் மாலை விருந்து' என்னும் வனப்புக்குரிய இலக்கியமாகும். விருந்தாய சொன்மாலை என்பது ஆளுடையபிள்ளையார் அருளிச் செயல். 3. விருந்து.புதும்ை; என்றது புதிதாகத் தொடுக்கப்படும் தொடர்நிலைச் செய்யுளை விருந்தேதானும் என்னும் உம்மை முற்கூறிய தோலே யன்றி விருந்தும் என இறந்தது தழிஇ நிற்றலின் தோல்' என்பது பழைய கதையைப் புதியதாகச் சொல்லியதெனவும் இங்குக் கூறப்படும். விருந்து' என்பது பொருள் பழயை தாயினும் புலவன் தான்விரும்பிய புதிய யாப்புவகையாற் பல செய்யுளுந் தொடர்ந்து வரச் செய்வது எனவும் விளக்குவர் பேராசிரியர்.