பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா கூ శ్రీ ఫ్ర" நிரைபுமாய் நின்றன. கூறும்’, ‘கிடக்கும்’ என இயல்பாகிய ஒற்றிறாயவழி அவை முறையே தேமா, புளிமா என இயற்சீராவதல்லது நேர்பும் நிரைபும் ஆகா என்பதாம். நிற்கவும் பெறுமே என்புழி உம்மை எதிர்மறையாதலால் நேர்பு, நிரைபு என்னும் இவ்வுரியசைகள் ஒற்றின்றி வருதலே பெரும்பான்மை யென்றார் பேராசிரியர். . அசையுஞ் சீரும் இசை)யாடு சேர்த்தி வகுத்தனர் உணர்த்தல்: வல்லோர் ஆறே. இாைம்பூர ைம் : என்-எ னின். வகையுளி யுணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) அசையையுஞ் சீரையும் ஒசையோடு சேர்த்திப் பாகுபாடுணர்த்தல் வல்லோர்கள் நெறி யென்றவாறு. அஃதாவது பொருளொடு சொல்லை யறுத்தவழித் தளையுஞ் சீருஞ் சிதையின் அவ்வழி ஓசையை நோக்கி அதன்வழிச் சேர்த்துக என்றவாறு. அது வருமாறு : 'மலர்மிசை ஏகினான் மானடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்” (குறள். க.) என்றவழி வாழ்வாரெனப் பொருணோக்கிச் சீராமாயின் ஒசை கெடும். அதன்கண் வாழ் என்பதனை முதனின்ற சீரோடொட்டக் கெடாதாம். பிறவு மன்ன. இத்துணையும் கூறப்பட்டது அசைவகை.2 (கC) இது, மேற் கூறப்பட்டனவற்றுக்கும் இனிவருஞ் சீர்க்கு மெல்லாம் புறனடை, (இ-ள்.) அசைகளையுஞ் சீர்களையும் ஒசையொடு சேர்த்தி வேறுபடுத்து உணர்த்துவித்தலும் அச்செய்யுளிலக்கணத் துறை போயினாரது நெறி (எ.று). - - - - - r - உணர்த்தலும் என்பது பேராசிரியர் கொண்ட பாடம். 1. முதனின்றசீரோடு ஒட்டக்கெடாதாம்-முதற்கண் நின்ற சீருடன் சேர்க்க, ஒசை கெடாது. 2. இவ்வியலில் மூன்றாஞ் சூத்திரமுதல் ஒன்பதாஞ்சூத்திரம் முடிய இதுவரையும் அசைவகை பற்றிய இலக்கணங்கூறப்பட்டது.