பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/841

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ககூெம் தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் உங்.உ. ஞகார முதல கைார் ஈற்றுப் புள்ளி இறுதி இயையெனப் படுமே, இளம்பூரணம் : என்-எனின், நிறுத்தமுறையானே இயைபாமாறு உணர்த்துதல் துதலிற்று. (இ.ஸ்) ஞணநமன யரலவழள என்னும் பதினொரு புள்ளியும் ஈறாக வருஞ் செய்யுள் இயைபென்னுஞ் செய்யுளாம் என்றவாறு. உதாரணம் வந்த வழிக் காண்க: (உங். உ) இஃது, இயைபுணர்த்துதல் துதலிற்று. (இ.ஸ்) ஞ ண ந ம ன, ய ர ல வ ழ ள வென்னும் பதினெரு புள்ளியீற்றினுள் ஒன்றனை இறுதியாகச் செய்யுஞ் செய்யுள் பொருட்டொடராகவுஞ், சொற்றொடராகவுஞ் செய்வது இயையெனப்படும் (எ-று.) இயைபென்றதனான் பொருளும் இயைந்து சொல்லும் இயைந்து வருமென்பது கருத்து; சீத்தலைச் சாத்தனாராற் செய் யப்பட்ட மணிமேகலையுங் கொங்குவேளிரிாற் செய்யப்பட்ட தொடர்நிலைச்செய்யுளும் போல்வன. அவை னகார ஈற்றான் இற்றன. மற்றையீற்றான் வருவனவற்றுக்கும் ஈண்டிலக்கணம் உண்மையின் இலக்கியம் பெற்றவழிக் கொள்க, இப்பொழுது அவை வீழ்ந்தனபோலும்.3 1. ஞகாரை முதலா னகாரை பீற்றுப்" என்பது பேராசிரியரும் ஞகாரை. முதலா ளகாரை வீற்றுப் என நச்சினார்க்கினியரும் பாடங் கொள்வர். ' 'என்' என முடியும் இறுதியையுடைய மணிமேகலைப் பாட்டுக்களை இயைபு என்னும் வனப்புக்குரிய இலக்கியமாகக் கொள்ளலாம். 3. குணநமன, யரலவழள என்னும் பதினொரு மெய்களுள் னகர வீற்றான் முடிவன வாகிய தொடர்நிலைச்செய்யுள் மணிமேகலையும் கொங்குவேண்மாக்கதையும் ஆகும். ஏனைய பத்து மெய்யீறுகளால் முடிவனவாகிய தொடர்நிலைச் செய்யுட்கள் கிடைக்கவில்லை. அவை இக்காலத்து வழக்கு வீழ்ந்தன போலும்' எனப் பேராசிரியர் குறிப்பிடுதலால் அவர் காலத்திலேயே அவை கிடைக்க வில்லை யென்பது நன்கு புலனாம்.