பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/842

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா உங் உ கCங்க பரந்த மொழியான் அடிநிமிர்ந்தொழுகிய தோலோடு இத னிடை வேற்றுமை யென்னையெனின், அவை உயிரீற்றவாதல் பெரும்பான்மை யாகலான் வேறுபாடுடைய சொற்றொடரான் வருதலு முடைய வென்பது. சொற்றொட்ரென்பது, அந்தாதி யெனப்படுவது; என்றதனான், உயிரீற்றுச் சொற்றொடர் சிறு பான்மை யென்பது கொள்க.ே இஃது இயைபு கூறுகின்றது. (இ.ஸ்) ஞ ண ந ம ன ய ர ல வ ழ ள என்னும் பதினொரு புள்ளியுள் ஒன்றனை யீறாகக்கொண்டு செய்யுளைப் பொருட்டொடராகச் செய்வது இயைபெனப்படும் எறு.ே இயை பென்றதனானே பொருளியைதல் பெற்றாம். பரந்த மொழியா லடிநிமிர்ந்த தோல் உயிரீற்றவாயே வரும். னகரவீற்றா, னிற்றுப் பொருடொடர்ந்தன மணிமேகலையும், உதயணன்கதையும், ஒழிந்த வொற்றுக்களுக்கும் இலக்கண முண்மையின் இலக்கியம் இக்காலத்து வீழ்ந்தன போலும். எனப்படுவதென்றதனான் இக்காலத்தார் கூறும் அந்தாதிச்சொற். றொடருங் கொள்க.கி ஆய்வுரை : இஃது, இயைபு என்னும் வனப்பு உணர்த்துகின்றது. (இ-ள்) ஞன நமன யால வழள என்னும் பதினொரு புள்ளியுள் ஒன்றனை இறுதியாகக் கொண்டு முடியுஞ் செய்யுள் இயைபு என்னும் வனப்புடையது என்பர் ஆசிரியர் எ-று. 1. பரந்தமொழியான் அடிநிமிர்ந் தொழுகிய தோல் என்னுந் தொடர்நிலை உயிரீற்றவாதல் பெரும்பான்மை. இயைபு என்னும் இத்தொடர்நிலை ஞகர முதலிய பதினொரு புள்ளிகளுள் ஒன்றால் முடிவன. இவைதம்முள் வேற்றுமை. 2 , சொற்றொடர் என்பது அந்தாதி எனப்படுவது என்றதனான் "உயிரீற்றுச்சொற்றொடர் சிறுபான்மையென்பது கொள்க' என இவ்வுரைத் தொடரைப் பிரித்துப் படித்தல் வேண்டும். 3. "இயைபு என்பது, ஞணநமன யரலவழள எனப்பட்ட பதினொரு புள்ளியீறாய் வந்த பாட்டெல்ல்ாம் என்பர் யாப்பருங்கல விருத்தியாசிரியர். 4. இவ்விளக்கம் பேராசிரியர் உரையை அடியொற்றியது.