பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/846

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா உங். ச கCங்டு இஃது இறுதிநின்ற இழையிலக்கண முணர்த்துதல் துத லிற்று. (இ~ள்) ஒற்றொடு புணர்ந்த வல்லெழுத்து அடக்காது. ஒற்றடுத்த வல்லெழுத்துப்பயிலாது; குறளடி முதலா ஐந்து அடி ஒப்பித்து இருசீரடி முதலாக எழுசீரடியளவும் வந்த அடி ஐந்தனையும் ஒப்பித்து: ஒப்பித்தலென்பது, பெரும்பான்மை. மையான் நாற்சீரடி படுக்கப்பட்டென்றவாறு;3 ஓங்கிய மொழியான்சி நெட்டெழுத்தும் அந்நெட்டெழுத்துப்போல் ஒசை எழும் மெல்லெழுத்தும் லகரா ளகாரங்களும் உடைய சொல் லான் : ஆங்ஙனம் ஒழுகின் இவையும். 'சேரி மொழியாற் செவ்விதிற் கிளந்து தேர்தல் வேண்டாது” (513) பொருள் புலப்படச் சென்று நடப்பின்; இழைபின் இலக்கணம் இயைந்ததாகும் இழைபென்று சொல்லப்படும் இலக்கணத்தது (எ-று) அவையாவன, கவியும் பரிபாடலும் போலும் இசைப்பாட் டாகிய செந்துறைமார்க்கத்தன வென்பது, இவற்றுக்குக் காரணந் தேர்தல் வேண்டாது பொருள் இனிது விளங்கல் வேண்டு மென்றது, அவிநயத்திற்கு உரியவாதல் நோக்கியென்பது மற் 1. ஒற்றொடுபுணர்ந்த வல்லெழுத்துப் பயின்றுவருதல் இசைநுட்பத்திற்குத் தடை வாராதாகலின் ஒற்றொடுபுணர்ந்த வல்லெழுத்தடக்காது" என்றார். அடக்குதல்-தன் கண் பலவாகச் செறித்தல். 2. இருசீரடி, முச்சீரடி நாற்சீரடி, நெடிலடி, கழிநெடிலடி என்னும் ஐந்தடிகள். 3. ஒப்பித்தலாவது நாற்சீரடியுடன் ஒத்து அமையுமாறு செய்தல். 4. ஓங்கிய மொழியாவது இசையினை வளர்த்துப் பாடும் முறையில் நெட் டெழுத்தும் அந்நெட்டெழுத்துப்போல் ஒசையெழும் மெல்லெழுத்தும் லகார ளகாரங்களும் உடைய சொல். 5. ஆங்ங்னம் ஒழுகுதலாவது இவ்விசைப்பாடல்களும் முற்கூறிய நாடகச் செய்யுள் போன்று வழக்குச் சொற்களாலே பொருள் விளங்கும்படி அமைந்தொழுகுதல். 6. செந்துறைமார்க்கத்தன. இசைப்பாடல் நெறியில் அமைந்தன. இவை மெய்ப்பாடு தோன்றப் பாடுதற்குரியவாதல் நோக்கி ஆராய்தல் வேண்டாது பொருள் இனிது விளங்க அமைதல் வேண்டும் என்றார் ஆசிரியர்.