பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/850

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா உங் ரு கCங் கி. அவை எண்சீர் முதலாயின வரிற் கழிநெடிலடிப்பாற் சார்த்திக் கோடலும், ஏது துதலிய முதுமொழியோடு, பாட்டிற்கு இயைபின்றியுந் தொடர் படுப்பனவும் யாப்பென்னும் உறுப்பின்பாற் கோடலும், பிறவும் ஈண்டோதாதன உள வெனின் அவையுமெல்லாஞ் செய்யுளிலக்கண முடிபாகு மென்றவாறு1. (உசங் ) நச்சினார்க்கினியம் : இது இவ்வோத்திற் கூறிய யாப்பிலக்கணத்திற் கெல்லாம் புறனடை கூறுகின்றது. (இ-ஸ்.) செய்யுண்மருங்கின் மெய்பெற நாடி யிழைத்த இலக்கணம். எ-து செய்யுளிடத்துப் பொருள்பெற ஆராய்ந்து தந்திரஞ்செய்யப்பட்ட இலக்கணத்தில, பிழைத்தனபோல வருபவுள வேனும், எது வழி இயின போன்று பின்னொன்று வருவனவுளவேனும். வந்தவற்றியலாற் றிரிபின்றி முடித்தல் தெள்ளியோர்கடன். எது முற்கூறிய இலக்கணத்தோடு திரியாமன் முடித்துக்கோடல் அறிவுடையோர் கடன். எ.று அவை யெண்சீரின் மிக்கனவற்றைக் கழிநெடிலடிப்பாற்சார்த்துவனவும் வெண்பாவாயே வந்து கொச்சகமா யடங்கு வனவும் ஆசிரியம் அவ்வாறு வருவனவுங் கொச்சகங்களின் வேறுபாடுந் தொடை வேறுபாடுகளும் பிறவுமாம். 1. பிழைத்ததுபோல' என்பது இளம்பூரணருரையிற்கண்ட பாடம். 'பிழைத் தனபோல என்பது பேராசிரியர் நச்சினார்க்கினிய ருரைகளிற் கண்ட பாடம். வருவன வுளவெனும் என்பது இளம்பூரணருரையிற் கண்ட பாடம். வருபவுளவெனிலும், 'வருப வுளவேனும் என்பன பேராசிரியருரைப் பதிப்பிலும், நச்சினார்க்கினிய ருரையிலும் காணப்படும் பாடங்களாகும். இந்நூலிற் கூறப்பட்ட எழுரேடியின் மிக்கு எண்சீர் முதலாயின வரின் அவற்றைக் கழிநெடிலடியின்பாற் சார்த்திக் கொள்ளுதலும் ஏது நுதலிய முது மொழியோடு பாட்டிற்கு இயைபின்றியுந் தொடர்புபடுக்குந் தொடர்கள் வரின் அவற்றையும் எழுத்து முதலா சண்டிய அடியிற் குறித்த பொருளை முடிய நாட்டும் யாப்பு என்னும் உறுப்பின்பால் அடக்கிக் கொள்ளுதலும் பிறவும் ஆக இந்நூலில் விரித்தோதப்படாதன வுளவெனின் அவையெல்லாமும் செய்யுளிலக் கணமுடிபாகும் என்பது இப்புறனடையாற் கொள்ளப்படும் என்றவாறு, 2. தந்திரஞ்செய்யப்பட்ட-நூலாக இயற்றப்பட்ட தந்திரம் நூல்.