பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/851

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கOசம் தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் ஆய்வுரை : இது, செய்யுளியலுக்குப் புறனடை கூறுகின்றது. (இ-ஸ்) செய்யுளிடத்துப் பொருள்பெற ஆராய்ந்து நுண்ணிதின் வகுத்துரைக்கப்பட்ட இலக்கணத்தின் வழுவியன போன்று தோன்றுவன உளவாயின் அவற்றையும் முற்கூறப்பட்ட இலக்கணத்தோடு மாறுபடாமல் முடித்துக் கொள்ளுதல் தெளிந்த அறிஞர்களது கடனாகும் எ-று. இப்புறனடைச் சூத்திரத்தினைக் கூர்ந்து நோக்குங்கால், இவ்வியலிற் கூறப்பட்டுள்ள தமிழ்ச் செய்யுளிலக்கண அமைப்புக்கள் யாவும் ஆசிரியர் நூல் செய்த காலத்தில் மட்டுமன்றிப் பின் காலந்தோறும் புதியனவாகத் தோன்றி விரிவு பெறுவதற் குரிய செய்யுள் வகைகள் அனைத்திற்கும் அடிப்படையாய் இடத்தந்து அமையும்வண்ணம் ஒல்காப் புலமைத்தொல் காப்பியனாரால் நுண்ணிதின் ஆராய்ந்து வகுத்துணர்த்தப். பட்டன என்பது நன்கு விளங்கும்.