பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா க ଛୋt .୫, உம்மையான் அடியினை வகுத்துணர்த்துதலுங் கொள்க.1 அது, 'துதல் திமையா நாட்ட மிகலட்டுக் கையது கணிச்சியொடு மழுவே' (அகம்-கடவுள் வாழ்த்து) என்புழி, ‘இகலட்டு' என்னுஞ் சீர் எழுத்து முதலாக ஈண்டிய வடியிற் குறித்த பொருளை முடியநாட்டப் பின் வந்ததாகலின் யாப்பென்னும் உறுப்பினுள் அடங்காது இகலட்டுக் கைய தென மேலடியோடு பொருள் கூடியும், இசையொடு சேர்த்தி வகுத்துணர்த்தியதேயாம். இன்னும் இவ்விலேசானே எழுத்தல் லோசையும்? அசையொடுஞ் சீரொடுஞ் சேர்த்தி வகுத்துணர்த் தலுங் கொள்க. அவை, சுஃஃ றென்னுந் தண்டோட்டுப் பெண்ணை’ என்றாற்போல்வன. இனி, அகவலோசை மூன்றெனவுஞ் செப்பலோசை மூன் றெனவும் அசையுஞ்சீரும் இசையொடு சேர்த்தி யென வகுத் துணர்த்துவாருமுளர். அவை இயலசைமயங்கிய இயற்சீரும் உரியசைமயங்கிய இயற்சீரும் வெண்சீரும்பற்றி ஓசை வேறுபட்டுத் தோன்றுமென்க. அங்ங்னமாயினும் அவை மும்மூன்றாக்கி வரையறுக்கப் படாமையின் ஈண்டவை கூறானென்பது. இனி, ஒருசாரார் அசையுஞ்சீரும் இசையொடு சேர்த்தி வகுத்துணர்த்தலென்பதனை இவ்வாறு முரைப்ப என்னை? ஒரு செய்யுளுட்கிடந்த அசை சீர்களை ஈண்டுக் காட்டிய தேமா புளிமாவென்பன முதலாகிய உதாரணங்களோடு சேர்த்தி அவ் விரண்டனையும் ஒக்கும் வகையான் ஒசையூட்டிக் காட்டுப; அற்றன்று, இவ்வுதாரணஞ் சீரென்று வலித்திருந்தார்க்காம் அது செய்துகாட்டல் வேண்டுவது. எல்லாச் சொல்லிற்கும் ஏற்றவாற்றான் அசையுஞ்சீரும் இசையோடெனப் பொதுவகை 1. 'அசையுஞ்சீரும்' என்னும் உம்மையால், அடியினையும் இசையொடு சேர்த்து வகுத்துணர்த்துதல் வல்லோாாறு எனக்கொள்ளப்படும் , 2. எழுத்தல்லோசை - குறிப்பிசை . 3. இவ்வாறு கூறுபவர் யாப்பருங்கல விருத்தியாசிரியர் முதலியோர், ஏந்தி கையகவல், துங்கிசையகவல், ஒழுகிசையகவல் என அகவலோசை மூன்று வகைப் படும். சைச் செப்பல் துங்கிசைச்செப்பல் ஒழுகிசைச்செப்பல் எனச் செப்பலோசை மூன்று வகைப்படும் என்பர்.