பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

莎了盈一 தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் யாற் கூறினமையின் அதுகாட்டல் நிரம்பாதென்பது. இனிக், "கடியாறு கடியாறு கடியாறு கடியாறு” என்பதனைத் துள்ளலாகச் சொல்லிக் கலியடியெனவுங், கடியாறு என்பது நேர்பீறாமென்பதாயினும், அது வெண்சீரே ஈற்றசை நிரையியற்றாய் நின்றதெனச் சொல்லி அதற்கு இலக்கணம், 'வெண்சி ரீற்றசை நிரையசை யியற்றே" (தொல்.செய்-29) எனப் பொருளுரைத்து, மற்றதனைக் கவித்தளையெனவுங் காட்டுப. அற்றன்று; "கடியாறு’ என்னுஞ் சீரின் உறழ்ந்த ஆசிரியவடியும் அதுவே வாய்பாடாக வருமாகலின், மற் றதன்கண் துள்ளலோசை பிறந்ததாலெனின், அவற்றுக்கண் ஒரோமாத்திரை கொடுப்பத் துள்ளலோசை பிறந்ததாயினும், "அசையுஞ் சீரு மிசையொடு சேர்த்திச் சொல்லுக வெனவே அங்ஙனம் மாத்திரை நீட்டிச்சொல்லாது அகவலோசைப்படச் சொல்லுகவென்பது இதனாற் பெற்றாமாகலின் அது பொருளன் றென்பது.2 (க.க) 1. ஒரு செய்யுளுட்கிடந்த அசை சீர்களைத் தேமா புளிமா என்பன முதலாகிய உதாரணவாய்பாடுகளோடு சேர்த்தி ஒசையூட்டிக்காட்டுதலே அசையுஞ் சீரும் இசையொடுபுணர்த்தலாகும் என்பர் ஒராசிரியர். இவ்வாறு உதாரண வாப்பாடு காட்டுதலென்பது செய்யுளுட் கிடத்தகீர் இன்னசீர் என்று வரையறை கண்டார்க்கே இயல்வதொன்றாகும். எல்லாச் சொல்லிற்கும் பொருந்தும் வகையால் செய்யுளிற்கிடந்த அசையையும் சீரையும் இசையொடு சேர்த்திச் செவிகருவியாக வகுத்துணர்த்துக என்னும் இவ்விதி பொதுவகையாற் கூறப்பட்டதாகலின், முன்னமே விளங்கிக் கிடந்த சீர்களுக்கு உதாரணவாய் பாட்டால் ஒசையூட்டிக் காட்டுதல் என்ற அளவில் இத்தொடர்ப்பொருள் நிரம்யாது என்பது கருத்து. 2. கடியாறு கடியாது கடியாறு கடியாறு என்பதனைச் சொல் விக்கலியடி யெனவும், கடியாறு என்பது 'திரைநேர்பு, என நேர்பீதாமாயினும் அது வேண். சீரீற்றசை நிரையியற்றாய் நின்றதெனச் சொல்வி அதனைக் கவித்தனையெனவும் காட்டுவர் ஒரு சாராசிரியர். கடியாறு என்னும் ஆசிரியவுரிச்சி என் - ஆசிரியவடியும் அதுவே வாய்பாடாகக் கடியாறு கடியாது கடியாறு கடியாது' எனவரும். அவற்றின்கண் ஒரோவொரு மாத்திரை கொடுப்பத் துள்ளலோசை பிறந்ததாயினும் அங்கனம் நீட்டிச்சொல்லாது அகவலோசைடடச் சொல்லுக என்பது, அசையுஞ்சீருமிசையொடு சேர்த்தி வகுத்தன. ருன வல்லோராறே யெனவரும் இச்சூத்திரத்தாற் பெற்றாம். எனவே அன் கூறும் விளக்கம் பொருளன்று என்றார் பேராசிரியர்.