பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

" * தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரை வளம் இனி உம்மையான் அடியுமிவ்வாறே வகுத்துணர்த்துக. f 'நுதல் திமையா நாட்ட மிகலட்டுக் கையது கணிச்சியொடு மழுவே" (அகம்-கடவுள் வாழ்த்து) என்புழி இகலட்டு என்னுஞ்சீர் குறித்தபொருளை முடியநாட்டும் யாப்பென்னும் உறுப்பினுள் அடங்காது ‘இகலட்டுக்கையது என மேலிலடியோடு பொருள் கூடிற்றேனும் இசையொடு சேர்த்தி வகுத்ததாயிற்று. இன்னும் அதனானே எழுத்தல் கிளவியாகிய ‘சுஃறென்னுந் தண்டோட்டுப் பெண்ணை’ என்பதனை அசை யொடுஞ் சீரொடுஞ் சேர்த்துணர்த்தலுங் கொள்க. இனி அகவன் முதலிய நான்கோசையினையும் ஒன்று மூன்றாக்கி வகுத்தல் தொல்காப்பியனார் கருத்தன்றாயிற்று; என்னை? இயலசை மயங்கிய இயற்சீரும், உரியசை மயங்கிய இயற்சீரும். வெண்சீரும் பற்றி யோசை வேறுபடத் தோன்றலின் அவை பன்னிரண்டென். னும் வரையுளடங்காவென்பதுபற்றி இன்னும் இசையொடு சேர்த்தி என்றதனானே 'ஓரள பாகு மிடனுமா ருண்டே (தொல்-மொழி மரபு-உ) என்ற ஐகாரமும் பொருள்சிதைந் திசையொடு சேர்தல் கொள்க. 'வண்கொன் றையைமருட்டுங் காண்” "புகழ் த லானாப்பெருவண் மையனே’ இவை முதலிடைகடைகளிற் சிதைந்தும் வருமென்று கொள்க. ஆய்வுரை : இது, முற்கூறிய அசை வகைக்கும் இனிக்கூறும் சீர்வகைக்கும் ஆவதோர் நெறியுணர்த்துகின்றது. (இ - ள்.) அசைகளையும் சீர்களையும் ஒசையோடு சேர்த்தி அவற்றை வகைப்படுத்து உணரச் செய்தலும் செய்யுளிலக்கணத் துறையில் வல்லவர்களது நெறியாகும் எ-று. செய்யுட்குரிய உறுப்புக்களாகிய அசையினையும் சீரினையும் மாத்திரையாகிய அளவினால் அளந்து இஃது இன்ன அசை, இஃது இன்ன சீர் என ஓசையுடன் சேர்த்திப் பாவுக்குரிய இனிய ஒசை இதுவெனவும் இன்னா ஓசை இதுவெனவும் செவி கருவி 1. இச்சூத்திரத்திற்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரை, பேராசிரியர் எழுதிய உரையின் சுருக்கமாகவே அமைத்துள்ளது.