பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 Hir தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம்

ம். ஈரசை கொண்டு மூவசை புணர்த்துஞ்* சீரியைத் திற்றது சீரெனப் படுமே. இளம் பூரணம்: என்-எனின். நிறுத்தமுறையானே சீராமாறு உணர்த்துதல் துதலிற்று. (இ-ள்.) இரண்டசைகொண்டு புணர்த்தும், மூன்றசை கொண்டு புணர்த்தும், ஒசை பொருந்தி யிற்றது. சீரெனப்படும் என்றவாறு. “தாமரை புரையுங் காமர் சேவடி” (குறுந். கடவுள்வாழ்த்து) என்றவழி நான்குசொல்லாகி ஒசை யற்றுநின்றவாறு கண்டு கொள்க.1 'எந்நன்றி கொன்றார்க்கு முய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு” (குறள். ககC) என்றவழி மூன்றசையினாற் சீராகியவாறும் அவ்வளவினான் ஒசையற்றுநின்றவாறுங் கண்டுகொள்க.2 இது, முறையானே அசையுணர்த்திச் சீராமாறுணர்த்து வான் தொடங்கி அவை இத்துணைப் பகுதியவென்பது உம் அவற்றுப் பொதுவிலக்கணமும் உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) இரண்டசையானும் மூன்றசையானும் ஒரொரு

  • 。こ

சொற்கள் சீரியைந்திறுவன சீரென்று சொல்லப்படும். (எ - று) “சீரியைந் திறுதல்’ என்பது வழக்கியல் செய்யுளாமாற்றால் யாப்பினும் பொருள்.

  • புணர்ந்துஞ் என்பது பேராசிரியருாையிற் கண்டபாடம் , 1 . . தாமரை புரையுங் காமர் சேவடி' என்றவழி ஈரசையினாற் சீராகி தான்கு சொல்லாகி ஒசையற்று நின்றவாறு கண்டுகொள்க’ என்றிருத்தல் வேண்டும்.

2. ஒசை அற்று நிற்றலாவது, தாள வறுதிபடச் சீராகிப் பிரிந்து நிற்றவிாகும். புணர்த்தும்' என இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் பாடங் கொண்டனர், புணர்த்தும் எனப்பாடங்கொள்வர் பேராசிரியர்.