பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா கம் (T නං” பெறப் பகுத்துப் பதமாகியவற்றுச் சேறல். உ - ம்: 'சாத்தன் கொற்றன்' எனவும், 'உண்டான் தின்றான்” எனவும், இரண்டசை கொண்டு சீராயின. 'கானப்பேர் சாய்க்கானம், கூதாளி' எனவும், 'உண்ணாதன’ ‘தின்னாதன’’ எனவும், இவை மூவசை புணர்ந்து சீராயின. இவை செய்யுளுள் வருமாறு : - - 'உலக முவப்ப வலனேர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு” a ^-ది :-_-* (பத்துப். திருமுரு. 1,2) என ஈரசைசசா வந்தன. “யானுரடத் தானுணர்த்த யானுணரா விட்டதற்பின் றானுரட யானுணர்த்தத் தானுணர்ந்தான்" (முத்தொள்ளாயிரம். 104) எனவும், "வசையில்புகழ் வயங்குவெண்மீன் றிசைதிரிந்து தெற்கேகினும்' (பத்துப் பட்டின, 1, 2) எனவும் இவை மூவசைச்சீர் வந்தன, பிறவுமன்ன. மற்றுச் சீரென்ற தென்னையெனின், பாணிபோன்று இலயம் பட நிற்றலான் அது சீரெனத் தொழிற்பெயராம்.1 - என்னை ? சொற்சீர்த் திறுதல்” (தொல். செய். 123) என்புழித் தொழிற்படுத்தோதினமையின். 1. தாளத்தின் நிகழ்ச்சி பாணி, துரக்கு, சீர் என மூன்று வகைப்படும். பாணி என்பது, ஒரு தாளத்தின் முதல் எடுக்குங்காலம். தாளத்தின் இடைநிகழுங்காலம் தாக்கு எனப்படும். தாளம் அறுதிப்பட முடியுங்காலம் சீர் எனப்படும், இந் நுட்பம் முற்பாணி, வளர்துக்கு, கொண்டர்ே என அடையொடு புணர்ந்தும் பாணியுந் தாக்கும் சீரும் என்றிவை மாணிழையரிவைகாப்ப' என முறையொடு புணர்ந்தும் வரும் கலித்தொகைக் கடவுள் வாழ்த்துப் பாடலின் தொடர்களாலும் நச்சினார்க்கினியர் உரையாலும் நன்குணரப்படும். இலயம்-தாள அறுதி. சீர் என்னும் பெயர் ஈண்டு தாள அறுதிபட முடிந்துநின்றறுதலாகிய தொழிற்றன்மைப் பட நிற்றலால் சீர் எனத் தொழிற்பெயராம் என்றார்.