பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா கம் §T 533 அவை ஒன்றுபட நிற்றல் வேண்டுமென்றவாறாம். எனவே, உலகத்துச் சொல்லெல்லாம் ஈரசையானும் மூவசையானுமன்றி வாராவென்பது பெற்றாம். இதனானே ஒருசொல்லைப் பகுத்துச் சீர்க்குவேண்டுமாற்றான் வேறு சீராக்கியவழியும் அச்சீர்வகையானே வேறு சொல்லிலக்கணம் பெறுமென்பதுங் கொள்க, அது, "மம்மர் நெஞ்சினன் றொழுதுநின் றதுவே” (அகம். 56) என்புழி, நின்றது என்னுஞ்சீர் குற்றுகர வீற்றுச் சொல்லன்றே, அதனைப் பிரித்து அதுவேயென வேறு சீராக்கவே, அது முற்று கரமாகி வேறுபடுதல் கண்கூடாக் கண்டுகொள்க :1 என்றார்க்கு, எனப்படுமென்ற தென்னையெனின், ஒரசையே சீர்நிலை பெறு மென்றுமாயினும் அவை சீரென முன்னோதப்படாவென்றற் கென்பது.2 மற்று நாலசையானும் ஐந்தசையானும் உண்ணா நின்றன. அலங்கரியாநின்றான் எனச் சொல் வருவன உளவா லெனின், அங்ங்னம் வருஞ் சொற்கள் சிலவாகலானும் அவை தாமும் இரண்டுசொல் விழுக்காடாய்ப் பிளவுபட்டு நிற்றலின் ஒரு சீரெனப்படாமையானும் அவை சீராக வருஞ் செய்யுள் இன்மையானும் என மறுக்க.3 1. நின்றது என்னுங்குற்றியலுகரiற்றுடன் ஏகாரம் புணருங்கால் புள்ளி. யீற்றுமுன் உயிர் தனித்தியலாது. மெய்யொடுஞ்சிவனும் அவ்வியல்கெடுத்தே' 'குற்றியலுகரமும் அற்றென மொழிப' என்றவிதிப்படி நின்றதே எனப்புணர்தல், வேண்டும். அவ்வாறன்றி மம்மர் நெஞ்சினன் றொழுதுதின் றதுவே என வகரவுடம்படுமெய் பெற்றுப்புணர்தற்குக் காரணம் தொழுதுநின்றது' என்னுஞ். சொற்களைச் சீராக்குங்கால் நின்றது' என்னும் குற்றியலுகரம் தொழுதுநின் றது' என முற்றியலுகரமாகச் சொல்வேறு பட்டமையால் சீர்வகையானே வேறு சொல்லிலக்கணம் பெற்றவாறு காணலாம். 2. ஒரசையே சீராம் நிலையைப்பெறும் என்று கூறினோமாயினும் அவை சீரெனச் சிறப்பித்து ஒதப்படா என்றற்கு, ஈரசை கொண்டும் மூவசை புணர்ந்தும் இற்றது . சீர் எனப்படும் என்றார் ஆசிரியர். 3. சீரெனப்படும் என்றதுகொண்டு, நாலசையானும் ஐந்தசையானுஞ் சொல்வருவன சிறப்பில்லாச் சீர்களெனத்தழுவிக்கொள்ளலாமே எனவினா. வினார்க்கு அங்ஙனம் வருஞ்சொற்கள் சிலவேயாகலானும் உண்ணா-நின்றான், அலங்கரியா - நின்றான் என இருசொற்களாகப் பிளவுபட்டு நிற்றலானும் அவை சீர்களாக வரும் சான்றோர் செய்யுட்கள் இன்மையானும் அவை கொண்டு நாலசைச்சீர்கோடல் பொருந்தாது என மறுக்க என்றவாறு.