பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா கக 5:S வரினும் அவையொன்றுபட்டுநிற்றல் வேண்டுமென்றுணர்க. எனவே, சொல்லெல்லாம் ஈரசையும் மூவசையுமாயல்லது வாராவென்பது உம், இனிப் புணர்த்து என்றதனான் அச்சீர்கள் அவ்வா றற்று நிற்குமேனும் பிறர் தொடர்புபடுத்தும்வழிப் புணர்ச்சி விகாரமெய்தாமற் றம்முட்டொடர்ந்து நிற்றலும் புணர்ச்சி விகாரமெய்தியுந் தொடர்ந்து நிற்றலுமுடைய. என்பதுTஉங் கொள்க. உ-ம் பேர்ந்து சென்று சார்ந்து சார்ந்து மதனுடை நெஞ்சமொடு நடுநா ளென்னாது” இவை புணர்ச்சி. விகார மெய்தாமல் இசையற்றுத் தொடர்ந்தன. ‘கடித்துக் கரும்பினைக் கண்டகர நூறி’ இது வல்லெழுத்துப் புணர்ச்சியெய்திற்று. இன்னும் அதனானே ஒரு சொல்லைப் பகுத்துச் சீர்க்கு வேண்டுமாற்றான் வேறு சீராக்கியவழியும் அச்சீர்வகையான் வேறு சொல்லிலக்கணம் பெறுதும். அது "மம்மர் நெஞ்சினன் றொழுதுநின் றதுவே" என்புழி நின்றது என்னுங் குற்றுகரவீற்றுச் சொல்லினைப் பிரித்து அதுவே என வேறொரு சீராக்க, முற்றுகரமாகி வேறுபடுதல் கொள்க. எனப்படும் என்று சிறப்பித்த வதனான் இவை சிறப்புடைய என்பது உம், ஒரசைச்சீர் இவைபோலச் சிறப்பில என்பதுTஉம் உணர்த்திற்று. உண்ணாநின்றான் என நாலசை யாலும் வருமாலெனின், அவை பிளவுபட்டு நிற்றலின் ஒரு சீரெனப்படாமையானும், அவை சீராகவருஞ்செய்யு ளின்மையானும், வஞ்சியுள் நேரிழை மகளி ருணங்குணாக் கவரும் (பட்டினப்பாலை) என்ற ஆசிரியவடியினை நாலசைச்சீர் காட்டவேண்டுவார் இருசீரடியாகவுரைப்பினும் அவற்றிற்குத் துரங்கலோசையின்றாகலானும், சீர் தம்முட் புணர்ந்திறுதலின்மையானும், வஞ்சிச்சீர் அறுபது காட்டுகின்றவழி யாண்டும் நேர்பசை நிரையசைகள் அலகுபெறாமையானும் தொல்காப்பியனார் கொள்ளார். உ-ம் 'சாத்தன், கொற்றன், தேமா ஈரசைச்சீர் கொண்டன3. கானப் 1. அற்று நிற்றலாவது, தாளவறுதிபட முடிந்து நிற்றல். 2. இவை' என்றது, ஈரசைச் சீரினையும் மூவசைச் சீரினையும். 3. இவை ஈரசை கொண்டன-என்றிருத்தல் பொருத்தமாகும்.