பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் . في fنئي பேர், சாய்க்கானம், தேமாங்காய் எனவும் உண்ணாதன, தின்னாதன, தேமாங்கனி எனவும் இவை மூவசை கொண்டன. பிறர் தொடர்புபடுத்தின செய்யுள் “உலகமுவப்ப வலனேர்பு’ (திருமுருகாற்றுப்படை) 'யாதானு நாடாமால்' எனவும் வசையில் புகழ் வயங்குவெண்மீன்’ (பட்டினப்பாலை) எனவும் ஈரசைச்சீரும் மூவசைச்சீரும் வந்தன. ஆய்வுரை : இது, சீரின் பொதுவிலக்கணமும் அதன் வகையும் உணர்த்து கின்றது. (இ-ள்) இரண்டசை கொண்டு புணர்த்தும் மூவசைகொண்டு புணர்த்தும் ஒசைபொருந்தித் தாள அறுதிப்பட நிற்பது சீர் என்று கூறப்படும் எ- று. சீரியைந்து இறுதல் என்பது, வழக்குநடை செய்யுள் நடை யாகும்படி யாப்பினுட் பொருள் பெறப் பகுத்துச் சொல்லாகியவற்றுட் செல்லுதல். உ-ம்: வேந்தன்' எனவும் வந்தான்' எனவும் இரண்டசை புணர்ந்து சீராயின. வானத்தார்’ எனவும் நில்லாதன எனவும் மூவசை புணர்ந்து சீராயின. இனிச் செய்யுளுள், “தாமரை புரையுங் காமர் சேவடி’ என்றவழி ஈரசையினாற் சீராகி நான்கு சொல்லாகி ஓசை அறுதிப்பட நின்றவாறும், 'எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை’ என்றவழி மூவசையினாற் சீராகி நான்கு சொல்லாகி ஒசை அறுதிப்பட நின்றவாறும் காணலாம். 'ஈரசை கொண்டும் மூவசை புணர்த்துஞ் சீர் இயைந்து இற்றது சீர் என்றமையால், ஒருசீர் பலசொல் தொடர்ந்து வரினும் அவை ஒன்றுபட நிற்றல் வேண்டுமென்பதும், எனவே உலகில் வழங்கும் சொல்லெல்லாம் ஈரசையானும் மூவசையானு