பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

特岛 தொல்காய்யியம் ஆராயப்படாரென்பது. முக்கோலுடையார் இருவருட் பிச்சை கொள் வானும் பிறாண்டிருந்து தனது கண்பானும் உலகியலின் ぐ。 rستير { تبيا நீங்காமையின் அவரையே வரைந்தோதினானென்பது.2 மற்று அரசர்க்கும் வணிகர்க்கும் உரிய நூலின் ஈண்டு வரைந்தோதினதென்னையெனின், - ஒருகோலுடையான் நூல் களைவானாகலின் அவனுஞ் சிறுபான்மை அந்தணனெனப்படு மென்பது கோடற்குங் கரகமும் மணையும் உடைய னென்றற்கு மென்டது. நூலினை முற்கூறினான் பிறப்பு முறையானுஞ் சிறப்பு முறையானுமென்பது. இனிக் குடுமியுங் குசையும் போல்வன கூறிற்றிலன், அது முன்னரும் பின்னரும் வருதலானும் மன்னரும் வணிகரும் பெறுதலானுமென்பது. 1. ஒரு கோலுடையார் என்றது, ஏகதண்ட சந்நியா சிகளை அப் பிரிவினர் முற்காலத்தில் தமிழகத்தில் இல்லாமையால் இங்குக் குறிக்கப்படவில்லை. 2. முக்கோலுடைய அந்தணர்கள் ஊர்தோறும் பிச்சையேற்று உண்பவரும் ஒரிடத்திலிருந்து தாம் ஈட்டிய பொருளையுண்டு வாழ்வாரும் என இருதிறத்தர் என்பர் பேராசிரியர். துரல் - முப்புரிநூல். கரகம் - கமண்டலம். மனை - அமர்தற்குரிய ஆசனமாகிய யாமை மனை. ஆயுங்காலை' என்றதனால் குடை, செருப்பு முதலாயினவும் கொள்ளப்படும். எனவும், ஒருகோலுடையார் இருவருளர்; அவர் துறவறத்து நின்றாராகலின் உலகியலின் ஆராயப்படார் என்பது. முக்கோ லுடையார் இருவருட் பிச்சை கொள்வானும் பிறாண்டு (பிறவிடங் களில்) இருந்து தனது உண்பானும் உலகியலின் நீங்காமையின் அவரையே (இச்சூத்திரத்து ஆசிரியன் வரைந்தோனாதின் என்பது' எனவும் தம் காலத்து வாழ்ந்த அந்தணர் வகையினை விளக்குவர் பேராசிரியர். இச்சூத்திரத்து முக்கோலே கூறப்பட்டி ருத்தலாலும் உறித்தாழ்ந்த கரகமும் உரைசான்ற முக்கோலும்’ (கலித்-9) எனக் கலித் தொகையில் முக்கோலந்தணர்களே குறிக்கப் பட்டிருத்தலாலும் சங்ககாலத்திலும் அதற்கு முன்னரும் ஒரு கோலேந்திய அந்தணாளர் ஆகிய துறவிகள் தமிழகத்தில் இலர் என்பது புலனாகும். முக்கோலுடையார் பிச்சையெடுத்து உண்டு வாழ்பவரும் தாம் விரும்பிய இடத்திலிருந்து தமது முயற்சியால் கிடைத்த உணவினை உண்டு வாழ்பவரும் ஆக இருவகையினர் இருந்தனர் எனப் பேராசிரியர் குறித்துள்ளார். இவ்விருதிறத்தார்