பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$33 தொல்காப்பியம் § { தொல்காப்பியத்தில் யாண்டும் சுட்டப்படவில்லை. அந் நிலையில் அரசர் வணிகர் என்ற இருதிறத்தாரையும் இடை யிருவகையோர்' என ஆசிரியர் இங்குக் குறிப்பிட்டார் எனல் பொருந்தாது. அன்றியும், இங்குக் குறிக்கப்பட்ட அரசரும், வணிகரும் அல்லாத பிறர்க்குப் படைப்பகுதி கூறுதல் இல்லை எனக்கூறும் இவ்வியல் 77-ஆம் சூத்திரவிதி பின்வரும் 82-ஆம் சூத்திர விதிக்கும் சங்கச் செய்யுட்களிற் காணப்படும் பழந் தமிழ் வழக்குக்கும் முற்றிலும் முரண்பட்டுள்ளது. வேளாண் மாந்தர் என்றொரு குலப்பிரிவு தொல்காப்பியனாரால் முன்னுள்ள இயல்களிற் குறிக்கப் பெறவில்லை. உரிப்பொருள் ஒழுகலாறு பற்றிய இச்செய்திகள், முதல் கரு உரி என்னும் பொருட்பகுதிகளை விளக்கும் அகத்திணையியல், புறத்திணை யியல் முதலாக முன்னுள்ள இயல்களிற் குறிக்கத்தக்கனவே பன்றி, மரபுப் பெயர்களின் வழக்குப் பயிற்சியைக் கூறுதற் கமைந்த இம்மரபியலில் இடம்பெறத் தக்கன அல்ல. ஆகவே 71-முதல் 85-வரையுள்ள இச்சூத்திரங்கள் நால்வகை வருணப் பாகுபாடு தமிழ்நாட்டில் வேரூன்றத் தொடங்கிய பிற் காலத்திலே இம்மரபியலில் இடைச்செருகலாக நுழைக்கப் பெற்றிருத்தல் வேண்டும் எனக்கருத வேண்டியுள்ளது. பிற்றை நாளில் தமிழரொடு தொடர்பில்லாத களப்பிரர் முதலிய அயல்மன்னரது ஆட்சியுட்பட்டுத் தமிழ்நாடு அல்லலுற்ற காலத்திலே தமிழ்மக்களது உரிமையுணர்வினைச் சிதைக்கும் நோக்கத்துடன் இத்தகைய அடிமைக் கருத்துகள் தமிழ்நூல் களிலும் ஆங்காங்கே இடம் பெறலாயின. அவ்வகையிலேயே தொல்காப்பிய மரபியலிலும் இவ்வருணப் பாகுபாடு இடைச் செருகலாக நுழைக்கப்பட்டிருத்தல் வேண்டும் என்பது, வடுவில் காப்பிய மதுரவாய்ப் பொருள் மரபு விட்டியதால்” (குலோத்துங்கச் சோழன்பிள்ளைத்தமிழ்) எனவரும் ஒட்டக்கூத்தர் வாய்மொழியால் உய்த்துணரப்படும் நால்வகை வருணப்பாகுபாடு தமிழகத்திம் வேரூன்றிய காலத்தில் வாழ்ந்தவர்கள் இளம்பூரணர், பேராசிரியர், நச்சி னார்க்கினியர் முதலிய உரையாசிரியர்கள். ஆதலால் மரபி யலின் இடையிலும் கடையிலும் பிற்காலத்தில் சேர்க்கப் பட்ட சூத்திரங்களையும் தொல்காப்பியனார் வாய்மொழி யாகவே எண்ணி உரையெழுதியுள்ளார்கள் எனக் கருத வேண்டியுள்ளது.