பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

፫ ፀ2 தோல்காப்பியம் நூன்மரபினுள் ஒதிய மூவகைச்சுட்டினை இடைச்சொ என - லோத்தினுள் ஒதானாயினான், அதுபோலவென்பது. 'கொன்றுகளம் வேட்ட ஞான்றை” (அகம் : 35) எனவும், 'அடுகளம் வேட்ட வடுபோர்ச் செழிய’’ (புறம் : 26) எனவும் அரசர்க்கு வேள்வி கூறினலாறு? ; பிறவும் அன்ன. ஆய்வுரை : இஃது, அந்தணர்க்கு ஒதப்பட்டன. சில அரசர்க்கும் உரிய عضم تعيخ 钞 என்கின்றது. (இ-ள்) அந்தணாளர்க்குரியன என மேற்கூறப்பட்டவற்றுள் அரசர்க்குப் பொருந்திவரும் பொருள்களும் உள எறு. 'அவை நாலுதொழில் ஈதல், வேட்டல், வேட்பித்தல், ஒதல் என்பர் இளம்பூரணர். அந்தணாளர்க்குரியவென மேல் ஒதப்பட்டனவற்றுள் முந்நூலும் மனையும் போல்வன” என் பர் பேராசிரியர். தமிழ் வேந்தர்கள் முந்நூலணிந்ததாகச் சங்க இலக்கியங்களிற் சான்றில்லை. (எ.க) எச. பரிசில் டாடாண் தினைத்துறைக் கிழப்டிெயர் நெடுந்தகை செம்மல் என்றிவை பிறவும் பொருந்தச் சொல்லுதல் அவர்க்குரித் தன்றே. இளம்பூரணம் : (இ-ஸ்) இப்பொருண்மையும் அரசர்க்குமுரித்து அந்த ணர்க்குமுரித்து என்றவாறு. 1. அ. இ. உ. அம் மூன்றுஞ் சுட்டு’ (தொல் - எழுத். 31) என நூன்மரபில் ஒதிய மூவகைச் சுட்டினை இடைச்சொல்லோத்தி னுள் ஒதாமை போன்று அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கம் ஐவகை மரபின் அரசர் பக்கம் இருமூன்று மரபின் ஏனோர் பக்கம்' என்பவற்றை இம்மரபியலில் ஆசிரியர் கூறாது போயினார். அவை இங்கு மரபுவகையால் தழிஇக் கொள்ளப்படும் என்றார் பேராசிரியர். 2. இங்கு அரசர்க்குரியதாகக் கூறப்பட்ட வேள்வி மறக்கள வேள்வியாகும். .

  • பரிசில் பாடாண் தினைத்துறைக்கிழமைப் பெயர்’ என்பதே பிழையற்ற பாடம். இதன் மூன்றாமடியின் இறுதியில் 'அவர்க்கு முரித்தென்ப' என்ற பாடமே இளம்பூரணருரைப் பகுதியொடு ஒத்து வருகின்றது. .