பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் 19s பேராசிரியம் : இஃது ஐயம் அறுத்தது; அந்தணாளர்க்குரியன அரசர்க்கு முரியன உளவெனக் கேட்ட மாணாக்கன் அரசர்க்குரியனவும் அந்தணர்க்குரியகொல்லென்று ஐயுறாமற் காத்தமையின் இஃது எய்தியதன்மேற் சிறப்புவிதியெனினும் அமையும்; என்னை? ஈண்டு ஒதப்பட்டவை அரசர்க்குரியவென்பது கொள்ள வைத்தமையின். (இ- ள்) பரிசில்-பரிசில்கடாநிலையும், பரிசில்விடையும் போல் வன; பாடாண்டிணைத் துறைக்கிழமைப்பெயர்-பாடாண்டினைக் குரிய கைக்கிளைப் பொருள்பற்றியுங் கொடைத்தொழில்பற்றியும் பெறும் பெயர்; அவை காளை இளையோன் என்பன போல் வன. (அவையு)(வு)ம், நெடுந்தகை செம்மலென்பன முதலாயின. வும், இவைபோல்வன பிறவும் புனைந்துரைவகையாற் சொல்லி னல்லது சாதிவகையாற் கூறுதல் அந்தணர்க்குரித்தன்று (எ-று). பரிசில்கடாநிலையும் பரிசில்விடையும் போல்வன கூறியுங், கைக்கிளைப்பொருள் கூறியுங், கொடைத்தொழில் கூறியும், அவற்றுக்கேற்ப எடுத்தோதிய பெயர் கூறியும், அந்தணரைத் தன்மை வகையாற் செய்யுள் செய்யப்பெறாவென்பது கருத்து. புனைந்துரை வகையான் அவையாமாறு : ' எண்ணாணப் பலவேட்டு மண்ணாணப் புகழ்பரப்பியும் ” (புறம் : 166) என வரும். கொடுத்தற்றொழில் வேள்விக்காலத்ததென வரையறுத்தலிற் பொருந்தக் கூறுதல் அவர்க்குரித்தன்றென்றானென்பது. 1 அந்தணாளர்க்குரியன அரசர்க்கும் உரியனவாய் அமைத லுண்டு எனக் கூறக் கேட்ட மாணவன், இவ்வாறு அர சர்க்கு உரியனவும் அந்தணாளர்க்கு உரியனவாதலுண்டோ என ஐயுற்று வினவினனாக அவனது ஐயத்தை நீக்கும் நிலையில் அமைந்தது இச் சூத்திரமாகும். பரிசில்கடா நிலையும் பரிசில் விடையும் பாடாண்திணைக்குரிய கைக் கிளைப் பொருள்பற்றியும் கொடைத்தொழில் பற்றியும் பெறும் சிறப்புடைப் பெயர்களும், நெடுந்தகை, செம்மல். முதலிய பெயர்களும் கூறிப் பாடப் பெறுதல் புனைந்துரை வகையாலல்லது சாதிவகையால் அந்தணர்க்கு உரியதன்று ' என இச்சூத்திரத்திற்குப் பொருள் கொண்டார் பேராசிரியர்,